Home /News /spiritual /

திருப்பதி போக திட்டமிடுகிறீர்களா... அக்டோபர் மாத டிக்கெட் ஆகஸ்ட் 24ல் ஆன்லைனில் விற்பனை

திருப்பதி போக திட்டமிடுகிறீர்களா... அக்டோபர் மாத டிக்கெட் ஆகஸ்ட் 24ல் ஆன்லைனில் விற்பனை

 கட்டண சேவை டிக்கெட்

கட்டண சேவை டிக்கெட்

tirumala tirupati ticket booking : டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேலும் அக்டோபர் மாதம் குலுக்கல் முறையில் பக்தர்கள் கட்டண சேவைகளில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகளும் 24ம் தேதி மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இது தவிர கல்யாணம் உற்சவம், கட்டணபிறமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளில் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே காணொளி மூலம் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க தேவையான டிக்கெட்டுகளும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



    டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati temple festival

    அடுத்த செய்தி