ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி ஏழுமலையான் கோவில் அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருப்பதி

திருப்பதி

Tirumala Tirupati Devasthanams | நாளை மாலை 3 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் அங்க பிரதட்சனம் செய்வதற்கு தேவையான டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்ட புதிய தங்க தகடுகள் பொருத்தும் பணி விரைவில் நடைபெற உள்ளது. எனவே பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவிலில் பாலாலயம் நடைபெறும்.

எனவே அடுத்த மாதம் ஒன்றாம் தேதி துவங்கி இருபத்தி ஒன்றாம் தேதி வரை மட்டுமே அங்கப்பிரதட்சன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும், டிக்கெட் தேவையான பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட் www.tirupatibalaji.gov.in மூலம் அவற்றை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati