Home /News /spiritual /

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு... அக்டோபருக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு... அக்டோபருக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்பனை

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

Tirumala Tirupati : திருமலை திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    எனவே, இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பிரமோற்சவ விழா நாட்களில் இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதால், அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 5ம் தேதி வரை பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாது.

    Must Read : விபத்தில் சிக்கியவருக்கு செய்த பேருதவி..108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் நேர்மைக்கு குவியும் பாராட்டு

    இதனை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் ஏழுமலையானை வழிபட விரும்பும் பக்தர்கள் டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் இதற்கான ஆன்லைனில் விற்பனை தொடங்கியுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati, Tirupati Devotees, Tirupati temple festival

    அடுத்த செய்தி