திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது

திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக  தொடங்கியது
திருப்பதி கோயில்
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாட்கள் பிரமோற்சவத்தின் முதல் நாளில், பெரிய சேஷ வாகனத்தில், மலையப்ப சுவாமி, நாச்சியார்களான, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார்.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் வண்ண கொடி மலையப்ப சுவாமி, தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் புடைசூழ, நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்துஅர்ச்சகர்கள் வேத மத்திரங்கள் முழங்க கருடன் வரையப்பட்ட கொடி, தங்க கொடிமரத்தில் ஏற்றினர்.

9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று, ஏழுமலையானுக்கு சமர்பித்தார். அப்போது, ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய எடைக்கு சமமான அளவில் 80 கிலோ 400 கிராம் அரிசியை துலாபார காணிக்கை சமர்பித்து ஏழுமலையானை வழிபட்டார்.
அதைத் தொடர்ந்து, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின், 2020ம் ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டி நாட்காட்டி மற்றும் டைரிகளை முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி வெளியிட்டார். முதல் நாள் இரவில் பெரிய சேஷ வாகனத்தில், மலையப்பஸ்வாமி, தன் நாச்சியார்களான, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் பல்வேறு கடவுள் உருவங்கள் மின்விளக்குகளாலும், பக்தர்களின் பொழுது போக்கிற்காக பாபவிநாசம் செல்லும் பாதையில் மலர் கண்காட்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன், திருமலை முழுவதும் ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகன சேவையை காண, 19 பெரிய திரைகள், திருமலை முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 45 மருத்துவர்கள் கொண்ட ஆறு தற்காலிக மருத்துவமனைகள் மாடவீதிகளிலும், பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மூன்றாவது நாளாக, சென்னை, முகப்பேர், சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருக்குடை ஊர்வலம் நடைபெற்றது.

Also Watch 

First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்