விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால், சுமார் 7 கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசை காத்திருக்கிறது. இலவச தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஐபி பக்தர்கள். சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை யாத்திரை திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 48 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே இறைவனை வழிபட முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது.
இதை படிங்க: ஜுன் மாதம் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்த தகவல்கள்...
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் விஐபி பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.