Home /News /spiritual /

திருப்பதி வருடாந்திர பவித்ரோற்சவம் : ஆன்லைன் டிக்கெட் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு

திருப்பதி வருடாந்திர பவித்ரோற்சவம் : ஆன்லைன் டிக்கெட் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயில் பவித்ரோற்சவத்திற்கான டிக்கெட்,  ஆகஸ்ட் 1-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பவித்ரோற்சவத்திற்கான டிக்கெட்,  ஆகஸ்ட் 1-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. கோயிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது யாகம் நடத்தப்படும்.  இதையொட்டி, நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாளன்று நடைபெறும் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.

    Also Read:  IRCTC மூலம் குறைவானத் தொகையில் திருப்பதிக்கு 6 நாள் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜ்…விபரம் உள்ளே!

    இதற்கான டிக்கெட்டை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று திருப்பதி தேவஸ்தான இணைய முகவரியில், 2,500 ரூபாயை செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவித்ரோற்சவத்தில் பங்கேற்க வரும் பக்தர்கள் சேவைக்கான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன், சம்பிரதாய உடை அணிந்து வரவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Online, Tirpathi, Tirumala Tirupati

    அடுத்த செய்தி