ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஆனி வாரா ஆஸ்தானம் என்ற பெயரில் ஆண்டுதோறும் புதுக்கணக்கு தொடங்கும் சம்பிரதாயம் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வு திருப்பதி கோவிலில் நாளை நடைபெறவுள்ளது. இதில், பழங்காலம் தொட்டு வழக்கத்தில் இருக்கும் நடைமுறையின் படி ஏழுமலையானின் கடந்த 365 நாட்களின் கோயில் வரவு செலவு கணக்கு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த 365 நாட்களுக்கான புது வரவு செலவு கணக்கு துவக்கப்படும். இந்த நிகழ்ச்சியை ஆனிவார ஆஸ்தானம் என்று கூறுகின்றனர்.
ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து கொண்டுவரப்படும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூமாலைகள், மங்கலப் பொருட்கள் ஏழுமலையானுக்கு நாளை சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த விழா ஆனி மாதம் கடைசி நாளில் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் நாளை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருள விசேஷ பூஜைகள் நாளை நடைபெற உள்ளன. அதேபோல் மாலை புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமியின் மாட வீதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக ஏழுமலையான் கோவிலில் நாளை கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபா அலங்காரண சேவை ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2020,2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின் சேவைகள் பெரிதும் தடைப்பட்டது. இந்தாண்டு கோவிட் பரவல் குறைந்து லாக்டவுன் நீக்கப்பட்டதை அடுத்த கடந்த இரு மாதங்களாகவே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதி வருகிறது.
இதையும் படிங்க:
குழந்தைகளே காலை 7 மணிக்கு ஸ்கூல் செல்லும்போது நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிக்கு வரக்கூடாது - உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி
வாரத்தின் இறுதி நாள்களில் இலவச தரிசன சேவைக்காக பக்தர்கள் மணிக் கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில் நிர்வாகமும் கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, தரிசன விதிகளில் அவ்வப்போது மாற்றாங்கள் செய்து வருகின்றது. அதிக கூட்டம் காணப்படும் காலங்களில் விஐபி தரிசனத்தை கோயில் நிர்வாகம் ரத்து செய்து விடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.