ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பூஜை காலங்கள் மாற்றம்.. முழு விவரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பூஜை காலங்கள் மாற்றம்.. முழு விவரம்

திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் கோவில்

Margazhi | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் மாதம் மார்கழி பிறப்பை முன்னிட்டு நாளை முதல் டிசம்பர் 16ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக மார்கழி கருதப்படுகிறது. வழிப்பாட்டிற்கு உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நாளை 16.12.2022 முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பூஜை காலங்கள் மாற்றப்படுகிறது. 16ம் தேதி முதல் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4:00  மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடக்கிறது.

அதிகாலை  5:00  மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடக்கிறது.

பின்னர் கோயில் நடை திருக்காப்பிடப்படும்.  இந்த பூஜை கால மாற்றம் ஜனவரி 14ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஆரூத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந் தேதி மட்டும் கோயில் நடை அதிகாலை 2:00 மணிக்கு திறக்கப்படுகிறது.

Also see... மார்கழி மாதத்தின் சிறப்புகள்...

இத்னை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15ம் தேதி) கோயில் நடை அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

First published:

Tags: Margazhi, Thiruchendur, Thoothukudi