Home /News /spiritual /

ஏழுமலையான் தரிசனத்தை பக்தர்கள் தள்ளி வைக்கவும் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

ஏழுமலையான் தரிசனத்தை பக்தர்கள் தள்ளி வைக்கவும் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை பக்தர்கள் தள்ளி வைக்கக்கோரி திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    திருப்பதியில் இருந்து ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில், காலை 6 மணியளவில் சுமார் 5 டன் எடையுள்ள பெரிய பாறை திடீரென சரிந்து விழுந்தது. தொடர்ந்து, உருண்டு சென்ற பாறை வளைவுப்பாதையாக ஒன்றன் கீழ் ஒன்றாக உள்ள 3 பாதைகளில், சரிந்து விழுந்தது.

    இதனால், மலைப்பாதையில் மூன்று இடங்களில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகள் ஆங்காங்கே துண்டான நிலையில், சில இடங்களில் மோசமான விரிசலும் காணப்படுகிறது. மண்சரிவால், அந்தப் பாதை வழியிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த வந்த தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர், தொடர்ந்து, சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரக்கிளைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே, மாற்றுப்பாதை வழியாக, முதல் அரை மணி நேரத்திற்கு திருமலைக்கு செல்லும் பேருந்துகளும், அடுத்த அரை மணி நேரத்திற்கு திருமலையில் இருந்து கீழே இறங்கும் பேருந்துகளும், சுழற்சி முறையில் தற்போதைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

    Also read: டிசம்பர் மாதம் திருப்பதி போறீங்களா.. இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

    இந்நிலையில், திருப்பதி மலைப்பாதையில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் இன்னும் 3 நாட்களுக்கு ஆந்திராவிற்கு தொடர் மழை ஆகிய காரணங்களால் ஏழுமலையானை தரிசிப்பதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் தங்கள் பயணத்திட்டத்தை தள்ளிவைக்க தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், நிலைமை சரியான பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi

    அடுத்த செய்தி