ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நாகப்பட்டினம் அருகே ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா...

நாகப்பட்டினம் அருகே ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா...

நாகப்பட்டினம் அருகே ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா...

நாகப்பட்டினம் அருகே ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா...

CHELLAMUTHU MARIAMMAN THEEMITHU FESTIVAL | இருக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூர் அடுத்த இருக்கை கிராமத்தில் பழமை வாய்ந்த  ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரை தீமிதி திருவிழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  ஒருவர் பின்  ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர்  சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Also see... பேராவூர் தீமிதித் திருவிழா.. நூற்றுக்கணக்கான பக்கதர்கள் பங்கேற்பு...

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்கவர் வாண வேடிக்கை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது...

செய்தியாளர்: பால முத்து மணி

First published:

Tags: Nagai, Nagapattinam