• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பக்தர்கள் வருகை அதிகரிப்பு! அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு

பக்தர்கள் வருகை அதிகரிப்பு! அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு

அத்தி வரதர்

அத்தி வரதர்

வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அத்திவரதரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அவரைத் தரிசிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார். இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதரை நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வருகிறார். அத்திவரதரை தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3- வது நாளான இன்று பக்தர்களின் வருகை அதிகரித்ததாலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் பொன்னையா அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க... 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்தி வரதர் திருவிழா





உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: