• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • கார்த்திகை மாதம் துளசிக்கு உகந்த மாதம் ஏன் தெரியுமா?

கார்த்திகை மாதம் துளசிக்கு உகந்த மாதம் ஏன் தெரியுமா?

துளசி

துளசி

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும்.

  • Share this:

    கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று எத்தனையோ காலத்திற்கு முன்பு நடந்தது அந்த தெய்வீக திருமணம். தீபாவளிக்கு பிறகு ஒரு 15 நாள் துளசி பூஜை (துளசி ஹப்பா )என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று துளசிக்கட்டை தான் மணமகள். நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள். கல்யாணத்திற்கு முன்பே முதல் நாள் சாயங்காலம் இப்போதெல்லாம் மணமக்களை வாழ்த்தி வரவேற்பு அளிப்பது போல கல்யாணத்திற்கு முதல் நாள் விஷ்ணுவும், துளசி என்கிற லக்ஷ்மியும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பார்கள். லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் திருமண மக்களாக பாவிப்பது ஐதிகம்.



    துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தமாகும். துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள + சி என்பார்கள். இதற்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள். மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.

    மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

    துளசியின் புராண கதை

    மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.

    அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார். தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.



    ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவு-மே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.

    துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம். வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும்.

    மேலும் படிக்க... துளசி செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்...

    கார்த்திகை மாதம் துளசிக்கு உகந்தது

    கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும். பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    துளசியை பறிக்ககூடாத நேரங்கள்

    ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பெளர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது. உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.

    மேலும் படிக்க... நோய்களை விரட்டும் துளசி தீர்த்தம் வழிபாடு!

    துளசியின் மருத்துவ குணங்கள்

    துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.



    அறிவியல் ரீதியாக துளசி உயர்வானது

    வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு. எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.

    மேலும் படிக்க...  நன்மைகள் பல தரும் துளசி விரத வழிபாடு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: