துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.
துளசி இலையின் நுனியில் நான் முகனும் (பிரம்மா), மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.
கோயிலிலோ, வீட்டிலோ பெருமாளுக்கு துளசி அணிவிக்கும்போது, ""தாயே! துளசி மாதா! அமிர்தத்தின் உறைவிடமாகத் திகழ்பவளே! பெருமாளுக்கு உன்னிடத்தில் தான் எவ்வளவு பிரியம்!'' என்று வாய்விட்டு சொல்லி அர்ப்பணிக்க வேண்டும். துளசி மாலையை இதயத்திற்கு நேராக வைத்து, ""சுவாமி இந்த துளசி மாலையோடு, பக்திமயமான என் இதயத்தையும் உனக்கு சமர்ப்பிக்கிறேன். எப்போதும் எனக்கு துணைசெய்யம்மா!'' என்று மானசீகமாக பிரார்த்திக்க வேண்டும்.
துளசியால் அர்ச்சிக்கும் போது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். கண்கள் அவன் திருவடிகளை மட்டுமே காண வேண்டும். இப்படி பிரார்த்திக்கும் போது துளசியை மட்டுமல்ல! பக்தனின் கோரிக்கையையும் முழுமையாக ஏற்று அருள்புரிவார் பெருமாள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.