ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பூரங்களின் பூரம் என்று வர்ணிக்கப்படும் திருச்சூர் பூரம் தொடங்கியது..

பூரங்களின் பூரம் என்று வர்ணிக்கப்படும் திருச்சூர் பூரம் தொடங்கியது..

திருச்சூர் பூரம்

திருச்சூர் பூரம்

Thrissur Pooram 2022 | கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இரு வருடங்களுக்கு பிறகு கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூர நிகழ்ச்சி துவங்கியது. திருச்சூர் வடக்குநாதன்  கோவிலில் இருந்து சாமி சிலையுடன் சிவக்குமார் என்ற யானை கோவில் முன் பகுதி வழியாக வெளியேறி ,ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் துவங்கி சுமார்  6 மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் நாளைய தினம் காலையில் பூரம் நிகழ்ச்சி முடிவடைகிறது.

கேரளாவில் திருச்சூர் பூரம் என்பது மே மாதத்தில் பூரம் தினத்தன்று நகரத்தின் மையத்திலுள்ள வடக்குநாதன் கோவில் முன்  கொண்டாடப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது.

சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில்  50க்கும் மேற்பட்ட யானைகள், மாயாஜால வித்தைகளான ஐந்து மேளங்கள் , தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் மற்றும்  நிகழ்ச்சியின் முடிவில் 6 - மணி நேரத்திற்கு மேலாக வெடிக்கும் வான வேடிக்கை என கேரளாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான திருவிழா இதுவேயாகும்.

திருச்சூர் பூரம் பூரங்களின் பூரம் என்று அழைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் 20-லட்சத்திற்கும் மேலானோர் இந்த பூர நிகழ்ச்சியில்  கலந்து கொள்வார்கள். கொரோனா கட்டுபாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக களையிழந்த இந்த திருவிழா  இன்று பிரமாண்டமாக நடந்து வருகிறது.

Also see... செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால் திருமணம் நிச்சயம்..

சுமார் 20 - லட்சத்திற்கும் மேலான  பொதுமக்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது . மொத்தமாக 5000  போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூர் பூர தினமான இன்று திருச்சூர் மாவட்டத்திற்கு பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kerala