Home /News /spiritual /

சாய்ந்து சாய்ந்து ஆடி வந்த தூக்குத் தேர் - பக்தர்களுக்கு அருள் பாலித்த தொட்டியம் மதுர காளியம்மன்!

சாய்ந்து சாய்ந்து ஆடி வந்த தூக்குத் தேர் - பக்தர்களுக்கு அருள் பாலித்த தொட்டியம் மதுர காளியம்மன்!

சாய்ந்து சாய்ந்து ஆடி வந்த தூக்குத் தேர்

சாய்ந்து சாய்ந்து ஆடி வந்த தூக்குத் தேர்

Madura Kaliamman Temple : திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் பங்குனித் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. சின்னத் தேரில் மதுர காளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் (என்கிற) மதுர காளியம்மன் கோவில் பங்குனித் தேர் திருவிழா பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பங்குனித் தேர் திருவிழா கடந்த, 15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

கடந்த, 22ம் தேதி காப்பு கட்டுதல், கதவடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கல்  வைத்தல், திருக்கதவு திறந்து சிறப்பு பூஜை, பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான  திருத்தேர் தலையலங்காரம் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 5 மணியளவில் பெரியத் தேர் மற்றும் சின்னத் தேர் திருவீதி உலா நடைபெற்றது.

சாய்ந்து சாய்ந்து

அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள், 40 அடி உயரமுள்ள பெரிய தேர் மற்றும், 37 அடி உயரமுள்ள சின்னத்தேரை தலையிலும், தோளிலும் பக்தியுடன் சுமந்து சென்றனர். பெரியத் தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்னத் தேரில் மதுர காளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அந்த தேர்களை, வலமாகவும், இடமாகவும் ஆடி அசைத்து பக்தர்கள் தூக்கிச் சென்ற காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா, கோட்டைமேடு, வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதைத் தொடர்ந்து, சந்தைபேட்டை, திருச்சி- சேலம் சாலை வழியாக சென்று, வாணப்பட்டறை மைதானம் சென்றது.

தூக்குத் தேர்


தொடர்ந்து, 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், எல்லை உடைக்கும் திருவிழாவும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த, 18 பட்டி கிராம ஊர் பொதுமக்கள்,கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.

தூக்குத் தேர்


Must Read : கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்ககாரர்களின் நமஸ்காரம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில், 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Car Festival, Temple, Trichy

அடுத்த செய்தி