Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று சாதனைகள் நிறைந்த நாளாக இருக்கும்... ( மே 06, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று சாதனைகள் நிறைந்த நாளாக இருக்கும்... ( மே 06, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 06-ஆம் தேதியின் எண் கணிதப் பலன்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் வீணான விஷயங்களுக்கு அல்லது ஆடம்பரத்திற்கு பணம் செலவழிப்பதை கட்டுப்படுத்த வேண்டிய நாள். புதிய வாய்ப்புகள் கிடைத்தால் தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். சட்ட அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களை தீர்க்க உங்களுக்கு அரசுடன் வலுவான தொடர்பு உடைய உறவினர் ஒருவர் உதவ கூடும். இன்று நல்ல பலன்களை பெற தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இன்று பொறுமையை கடைப்பிடிக்க மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஆசிரமங்களில் மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். புதிய தொழில் தொடங்க பணம் முதலீடு செய்ய இன்று நல்ல நாள். உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற நாள். வியாபாரத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை சுமுகமாக நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்கவும், பயணங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு வெள்ளை இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எல்லா துறையை சேர்ந்த கலைஞர்களுக்கும் இன்று ஒரு சிறந்த நாள். அதிர்ஷ்டம் இன்று உங்கள் பக்கம் இருக்கும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள், உணவக உரிமையாளர்கள், ஹோட்டல் அதிபர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வளர்ச்சிக்கான சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: மஞ்சள் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு இன்று தேசபக்தி உணர்வு அதிகரிக்கும். சமுதாய முன்னேற்றம் மற்றும் சமுதாய தொண்டுகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள். இன்று நீங்கள் அன்னதானம் செய்வது சிறப்பான பலன்களை வாழ்வில் ஏற்படுத்தி தரும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று நீங்கள் முழுமை அடையும் நாள். உங்கள் வாழ்க்கை துணையின் உணர்ச்சிகளை நீங்கள் மதிக்க வேண்டும். உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள் கிடைக்கும். விளையாட்டு வீரர், திரைப்பட இயக்குநர்கள், நகைக்கடைக்காரர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் பயணிகளுக்கு இன்று சிறந்த பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: அனாதை இல்லத்திற்கு மரக்கன்றுகளை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உணர்வு மற்றும் அதற்கான வாக்குறுதிகள் இன்று முழுவதும் உங்கள் மனதை ஆளும். சிறந்த வாய்ப்புகள், ஆடம்பரம், செழிப்பு, மரியாதை மற்றும் அதிகாரத்தை அனுபவிக்கும் நாளாக அமையும். பெற்றோர்- குழந்தைகள் இடையே உறவு பலப்படும். அதிக பொறுப்புகளை இன்று சுமக்காதீர்கள். நகை கடைக்காரர்கள், நடிகர்கள், மருத்துவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கோவிலில் வெள்ளி நாணயத்தை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் மேலதிகாரி அல்லது சீனியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் மீது நம்பிக்கை மற்றும் மரியாதையை உங்கள் நேர்மை ஏற்படுத்தி தரும். அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்களுக்கும் இன்று ஒரு சிறந்த நாள். உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை உங்களது வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒப்பந்தங்கள் செய்ய அல்லது நேர்காணல்களில் கலந்து கொள்ள இன்று சிறந்த நாள். வணிகத்தில் பரிவர்த்தனைகள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். எவ்வளவு பிசியாக இருந்தாலும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள் இன்று. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சி மாற்று முக்கியம் என்றாலும் இன்று வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு சாதனைகள் நிறைந்த நாளாக இருக்கும். குறிப்பாக மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் இன்று புதிய வெற்றியைக் காண்பார்கள். பழைய நண்பர்களை அல்லது சக நண்பர்களை அணுகி வியாபாரம் அல்லது வேலையில் அடுத்த கட்டம் நகர்வதற்கான சிறந்த பதிலை பெறுவீர்கள். இன்று உங்களு அமைதியான அதே சமயம் அழகான நாள் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

மே 06-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மோதிலால் நேரு, விந்து தாரா சிங், ககன் நரங், அப்துல்கனி லோன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி