Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (மே 26, 2022) அதிகமான பண வரவு இருக்கும்..

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (மே 26, 2022) அதிகமான பண வரவு இருக்கும்..

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 26 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தடைகளை சந்திக்கும் இடங்களில் உங்கள் நம்பிக்கையில் தடுமாற்றம் வரவே கூடாது. பிறருடைய வெற்றியால் உங்களுடைய செயல்திறன் பாதிக்கப்படலாம். ஆனால், அது தற்காலிகமானதே. புதிய இடத்தில் பணிபுரிய, புதிய பதவி பெற, புதிய நண்பரை தேட அல்லது புது வீடு வாங்குவதற்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், அதற்கான வேகத்தை சற்று குறைத்து கொள்ளவும். குடும்பத்தினரிடம் ஆலோசனைகளை கேட்டுப் பெறவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்ச்சிகளை சீராக வைத்திருக்க வேண்டிய நாள் இது. எங்கு துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கு அதை மறைக்க வேண்டும் என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்பதால் புத்திக்கூர்மையுடன் செயல்படவும். மருத்துவர்கள், பொறியாளர்கள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் போன்றோருக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகளில் இருப்பவர்கள், நேரடி தகவல் தொடர்பு மூலமாக தங்கள் உறவை நிரந்தரமாக மாற்றிக் கொள்வதற்கான சிறப்பான நாள் இதுவாகும். கவர்ச்சியான மற்றும் கற்பனை மிகுந்த உங்களது பேச்சுத்திறன் முதலாளி மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை ஈர்ப்பதாக அமையும். உடமைகளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். கட்டுமானம் மற்றும் வேளாண்மையில் முதலீடு செய்ய சரியான நேரம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தனம் தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் கட்டாயம் கோவிலுக்கு செல்வதுடன் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு இன்றைக்கு அதிகமான பண வரவு இருக்கும். ஆனால், உங்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலன் சார்ந்த செலவுகள் இருக்கும். உயர் பதவிகளில் இருக்கும் நபர்களுக்கு மென்மேலும் வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. சரியான நேரம் நெருங்கி வந்திருப்பதால் அரசு வேலைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியில் புதிய மாறுதலை எதிர்பார்க்கும் மக்களுக்கு நல்ல அனுபவம் காத்திருக்கிறது. இன்றைக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதால் உங்கள் தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் பார்ட்னரிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சரியான நாள் ஆகும். பங்குகள், நிலம் வாங்குவதற்கு, சொத்துக்களை விற்பனை செய்வதற்கு உகந்த நாள் ஆகும். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தற்போதைய வாய்ப்புகள் மூலமாக வெற்றியை எதிர்நோக்கும் நாள் இது. உங்கள் எதிர்காலத்திற்கு இது பயனுள்ளதாக அமையும். உங்கள் பணி சார்ந்தும் நிறைய வாய்ப்புகள் வர இருக்கின்றன. குழுவாக இணைந்து பணியாற்றினால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து கிடைக்கும் மரியாதை மற்றும் ஆதரவு ஆகியவை மகிழ்ச்சியை தரும். இல்லத்தரசிகள், டிசைனர்கள், வழக்கறிஞர்கள், நடிகர்கள் போன்றோருக்கு பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழப்பம் மற்றும் கோபம் இன்று குறைவாக இருக்கும். இன்றைக்கு வரும் புதிய வாய்ப்புகளால் எந்தப் பலனும் இல்லை என்பதால் அவற்றை புறக்கணிக்கவும். ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் பார்ட்டிகளை தவிர்க்கவும். வணிகத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உதவிகரமாக இருக்கும். எதிர் பாலினத்தவர் மற்றும் மூத்தவர்கள் மூலமாக அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - வெண்கலம் அல்லது காப்பர் பொருள் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பணவரவு கிடைக்க சாத்தியம் உள்ளது. வணிகத்தில் பெரும் பிராண்ட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் விசுவாசமாக இருப்பதால் தலைமைப் பண்பை நீங்கள் அனுபவிக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும். கனிவாக பேசினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கருப்பு நிற பொருள்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தானம் என்பது வீட்டில் தொடங்குவது என்பதை நினைவில் கொள்ளவும். மனிதாபிமானம் தான் உங்கள் சொத்து. ஆகவே கருணையுடன் செயல்படவும். இன்றைக்கு நாள் முழுவதும் பல பலன்கள் கிடைக்கும். வாய்ப்புகள், புத்துணர்ச்சி மற்றும் குதூகலம் ஆகியவை நிரம்பியிருக்கும். நிதி சார்ந்த லாபங்கள் மற்றும் சொத்துப் பதிவுகள் ஆகியவை இன்றைக்கு நடைபெறக் கூடும். உறவுகளில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மலரும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - தேவை உள்ளவர்களுக்கு கர்ச்சீஃப் தானம் செய்யவும்.

மே 26 அன்று பிறந்த பிரபலங்கள் : விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில் குமார், மனோரமா, திலீப் ஜோஷி, ராமதாஸ்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி