ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்... (மே 07, 2022)

எண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்... (மே 07, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 07-ஆம் தேதியின் எண் கணிதப் பலன்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் சரியான கணிப்புகள் இன்று அனைத்து முடிவுகளிலும் துல்லியமாக வைத்திருக்க உதவும். புதிய வாய்ப்பைப் பெற கவனமாக இருக்கவும். சர்ச்சைக்குரிய சொத்துப் பிரச்சினைகளைத் தீர்க்க உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். தியேட்டர் கலைஞர்கள், பொற்கொல்லர்கள், வழக்கறிஞர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சலுகையைப் பெறுவார்கள். சூரிய பகவானுக்கு நீர் வழங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

நன்கொடைகள்: ஏழைகளுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கும்போது கவனமாக இருக்கவும். இன்று வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். இன்று குழப்பம் மற்றும் சந்தேகம் அதிகமாக இருக்கும் என்பதால் காதல் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரம் சுமூகமாக இருக்கும். சிறிய பிராண்டுகளுடன் கூட்டு சேர வேண்டிய நேரம். வேலையை மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2மற்றும் 6

தானம்: யாசகர்களுக்கு அரிசியை தானமாக வழங்குங்கள்

#எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்தவொரு தொழிலில் உள்ள விற்பனையாளருக்கும் ஒப்பந்தங்களை முடிக்கவும், இலக்குகளை அடையவும் முடியும். ஒரு புதிய உறவும் சேரும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். ஆனால் இன்று நீங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது தனிப்பட்ட விஷயங்களைப் பகிர வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அழகுசாதனப் பொருட்கள், ஹோட்டல் வியாபாரிகள், மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் எழுத்தாளர்களின் தொழில் வளர்ச்சி காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: தேவையானவர்களுக்கு பசுமஞ்சளை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியல்வாதிகள் தற்போதைய திட்டங்களை செயல்படுத்த இந்த நாளை பயன்படுத்த வேண்டும். பயணம் செய்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும் சாதகமான நாள். நீங்கள் அனைத்து பணிகளையும் கச்சிதமாக முடிப்பீர்கள்.போர்வைகளை தானம் செய்வது மேஜிக் போல நல்ல பலன்களை தரும். இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகத்தில் இருப்பவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு காலணி அல்லது போர்வையை தானமாக வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குறுக்குவழிகளை மறந்து, பரஸ்பர நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சொத்து அல்லது பங்கு முதலீடுகளில் பண வரவு மற்றும் லாபம் ஏற்படும். விளையாட்டு வீரர் மற்றும் பயணிகளுக்கு சிறந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை அல்லது மஞ்சள் நிற ஆடையை அணியுங்கள். இன்று விநாயகப் பெருமானின் கோவிலுக்குச் சென்று அவருடைய ஆசிர்வாதத்தைப் பெறுங்கள்

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: முதியோர் இல்லத்துக்கு மரக்கன்றை வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் நேர்மையாக இருப்பீர்கள். பதிலுக்கு அது கிடைப்பது கடினம். தயவு செய்து மற்றவர்கள் உங்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்கள் அறிவுக்காக மக்கள் உங்களை உயர்வாக மதிக்கிறார்கள். ஹோட்டல் வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் நாள் அவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: வெள்ளை நாணயத்தை தானமாக வழங்கவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கடினத்தன்மையை மாற்றிக் கொண்டு, கடந்த காலத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆளுமை மற்றும் கணிப்புத் திறன் ஆகியவை தான் உங்கள் சொத்துக்கள். தீங்கு விளைவிக்கும் சர்ச்சைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். காதல் உறவு உங்களை புண்படுத்தும், அவமரியாதையை கொடுக்கும். எனவே, கவனமாக இருக்கவும். நீதிமன்றங்கள், திரையரங்குகள், தொழில்நுட்பம், அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சிறிய அல்லது பெரிய பிராண்டாக இருந்தாலும் உங்கள் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும். ஆரோக்கியம் மீது கவனமாக இருக்கும். சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய நேரம். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்றைக்கு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: வசதியற்றவர்களுக்கு பச்சை நிற ஆடைகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மனிதநேயம் அதிகரித்தால் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும். ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்கள் பெயரையும் புகழையும் காண்பார்கள். இந்த நாளை தொடங்குவதற்கு பர்சில் சிவப்பு கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

மே 7 ஆம் தேதி பிறந்தவர்கள்: ரவீந்திரநாத் தாகூர், சித்தார்த் மலாலா, எஸ்பி ஜனநாதன், சுந்தீப் கிஷன்

First published:

Tags: Numerology