ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் - இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (24 செப்டம்பர் 2022) வணிக பரிவர்த்தனை வெற்றிகரமாக இருக்கும்!

எண் கணித பலன்கள் - இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (24 செப்டம்பர் 2022) வணிக பரிவர்த்தனை வெற்றிகரமாக இருக்கும்!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | செப்டம்பர் 24-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

பணப் பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கும் என்பதால் உங்கள் நம்பிக்கையை வலுவாக வைத்திருங்கள். சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு பார்ட்னஷிப் சரிவாரது என்பதை நீங்களே உணருவீர்கள். சட்டரீதியான அல்லது உத்தியோகபூர்வ பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய நபர்களை சந்திக்கக்கூடும் என்றாலும், அவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் புதிய திட்டங்களுக்கு வெற்றி கிடைக்கும். தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். சூரிய பகவானின் ஆசியைப் பொறுவது நல்லது.

அதிர்ஷ்டமான நிறங்கள் : மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் வியாழன்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடை: பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் அரிசி தானம் செய்யுங்கள்

# எண் 2: (நீங்கள் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கூட்டு நிறுவனங்களை விட தனிப்பெரும் நிறுவனங்கள் வெற்றி பெறும்.வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டுவர இன்று வீட்டிலும் குடும்பத்திலும் பொறுப்பேற்க வேண்டும்.உங்கள் காதல் உணர்வுகளை நிரந்தர உறவாக மாற்றும் ஒரு காதல் நாள். தொழில் சம்பந்தமான காரியங்கள் சில தாமதங்களுடன் நிறைவேறும். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம். பயணத்தைத் தவிர்க்கவும். விநியோகஸ்தர், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நகை வியாபாரிகள் காகிதத்தில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்கள்: 2 மற்றும் 6

நன்கொடை: கோவில் அல்லது தேவைப்படுபவர்களுக்கு வெள்ளி நாணயத்தை நன்கொடையாக வழங்குங்கள்

# எண் 3: (நீங்கள் 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முக்கியமான பணிகளுக்குச் சென்றால் பச்சை மஞ்சளை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். புதிய ஆரம்பம் இன்று குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், வசீகரமாகவும் இருப்பதால் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். அயோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர்கள்

இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் வியாபாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தொழிலில் சிறப்பான லாபம் பெறுவார்கள். நாள் தொடங்கும் முன் சந்தனத்தை நெற்றியில் தடவவும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: சிவப்பு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1

நன்கொடை: கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

# எண் 4: (நீங்கள் 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய ஆதாரங்கள் மற்றும் யோசனைகள் மூலமாக அறிவை வளர்த்துக்கொள்ள சிறப்பான நாள். பணியிடத்தில் முதலாளிகள் அல்லது நண்பர்கள் மூலமாக கிடைக்கும் ஆதாயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். தானியங்களை தானம் செய்வதால் நிறைய புண்ணியம் கிடைக்கும். இன்று ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தரகர்கள், கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் மருந்து போன்ற வணிகங்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய பண மேலாண்மை திறன் குறைந்த இழப்புடன் அதிக ஆதாயம் பெற உதவும்.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம்

அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடை: அனாதை இல்லத்திற்கு பருப்பு வகைகளை தானம் செய்யுங்கள்

# எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புகழ் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உங்கள் சமூக தொடர்புகள் இன்று இன்று ஆதரவளிக்கும். குழப்பும் விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் சொந்த விருப்பத்துடன் சொத்து முதலீட்டில் முக்கிய முடிவுகளை எடுங்கள். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயணிகள் சிறந்த விஷயங்களுக்காக காத்திருக்கக்கூடும். மீட்டிங்கில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிற ஆடையை அணியுங்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொட: குழந்தைகளுக்கு பச்சை பேனா தானம் செய்யுங்கள்

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். மனதை அமைதிப்படுத்த உங்களுக்கு நீங்களே தான் மருந்து. தோளில் உள்ள சுமைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜோக்கிகள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ஷ்டமும், திறமையை வெளிப்படுத்த சிறப்பு வாய்ந்த நாள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு தந்தைகள் சிறந்த வழிகாட்டியாக விளங்குவார்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடை: ஆசிரமங்களுக்கு எஃகு பாத்திரத்தை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சிறந்த பலன்களுக்கு கேது கிரகத்தின் மந்திரத்தை உச்சரியுங்கள். கடந்த காலத்தில் உங்களைத் துன்புறுத்தியவர்கள் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள். வலிக்கான காரணத்தை அகற்றுவது இப்போது அவசியம். பணியிடத்தில் மேலதிகாரி அல்லது பெரியவர்களிடம் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் நேர்மைக்கு ஈடாக தம்பதிகளுக்கு இடையேயான உறவு மரியாதையை கொடுக்கும். இன்றைய தினம் தணிக்கை தேவை என்பதால் ஆவணங்களை நம்ப வேண்டாம். ஆனால் குணப்படுத்துதல், உந்துதல், அமானுஷ்ய அறிவியல், ஆன்மீகப் பள்ளிகள், விவசாயம், தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடை: கோவிலில் பால் தானம் செய்யுங்கள்

#எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏற்ற தாழ்வுகளுடன் கூடிய வெற்றிகரமான நாள். ஒரே இலக்கை முறியடிக்க இன்று நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும், அதற்கு உங்கள் சீனியர் வழிகாட்டியாக உதவுவார். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும் ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்கள் ஒரு நாளைக்கு இடைநிறுத்தப்பட வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம். தயவு செய்து இன்று பயணத்தை தவிர்க்கவும். ஆன்மீகம் மற்றும் காதல் உறவுகளில் நம்பிக்கையை அதிகரிக்க இன்றைய சிறந்த சேர்க்கைகளில் ஒன்று.

அதிர்ஷடமான நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடை: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஆசிரியர், சட்டம், ஆலோசனை மற்றும் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உயரங்களைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நம்பிக்கைகள் நிறைந்த நாள். வணிகம் அல்லது வேலையில் அதிகாரம் பெற பழைய நண்பர்கள் அல்லது சகாக்களை அணுக ஒரு அழகான நாள். நாளைத் தொடங்க சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும். திருமணத் திட்டத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நாள். தயவு செய்து கோபத்தை கட்டுப்படுத்தி, உணவில் கீரைகள் மற்றும் சிட்ரஸ் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்கள்: 9 மற்றும் 6

நன்கொடை: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

Published by:Lakshmanan G
First published:

Tags: Numerology