Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 செப்டம்பர் 2022) ஆதரவற்றவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 செப்டம்பர் 2022) ஆதரவற்றவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 23-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆனால், பந்தயம் கட்டுவது மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் தனித்துவமான தலைமை பண்பு மூலமாக உங்களுக்கான மதிப்புகளை நீங்கள் விரிவாக்கம் செய்வீர்கள். வாழ்க்கை துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5
தானம் - ஏழைகளுக்கு வாழைப்பழம் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தொழில்முறை வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கை கூடி வரும். ஆனால், தனிப்பட்ட உறவுகளை பொருத்தவரையில் மூன்றம் நபர் மீது ஒரு கண் வைக்க வேண்டும். பெண்கள் இன்று புதிய வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். அதேபோல வணிகத்திலும் முதலீடு செய்யலாம். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் எதிரிகள் எவ்வளவுதான் உங்களுக்கு எதிராக செயல்பட்டாலும், அவை அனைத்தும் வீழ்ச்சி அடையும். உறவுகளில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. புத்தாக்க சிந்தனை கொண்ட நபர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். புதிய வணிக வாய்ப்பு வெற்றிகரமாக அமையும். விளையாட்டு வீரர்கள், விமான பணியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களுக்கு ஏற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - அரக்கு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிலுவையில் உள்ள அல்லது தாமதமாகி வருகின்ற பொறுப்புகள் இன்று நிறைவடையும். நிதி சார்ந்த மற்றும் மார்க்கெட்டிங் உத்தி சார்ந்த விஷயங்களை செயல்படுத்தினால் நிச்சயமாக லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் களைப்பாக உணர்ந்தாலும், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் முடிவுகள் நல்லபடியாக அமையும். இளம் வயதினர் தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு பச்சைக் காய்கறிகள் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவும். இன்றைக்கு மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். பயணம், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவற்றில் நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிங்கிளாக இருப்பவர்களுக்கு சரியான ஜோடி அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - கால்நடைகளுக்கு தானியம் வைக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் அப்பாவித்தனத்தை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், அவர்களுடைய பொறுப்பை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். அதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உயர் கல்வி வாய்ப்பு, புதிய வீடு, வேலை, பண லாபம் போன்றவை இன்று வந்து சேரும். இன்றைக்கு அனைத்து இலக்குகளையும் நிறைவு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2
தானம் - குழந்தைகளுக்கு பென்சில் அல்லது பேனா வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய ஆதாரங்களில் பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நாளில் மூதாதையர்களுக்கு மரியாதை கொடுக்கவும். ஆண்களுக்கு வணிகத்தில் போராட்டம் நிலவும். ஆனால், பெண்கள் வணிகத்தில் வளர்ச்சி காணலாம். நம்பிக்கை தான் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். ஆகவே பேசும் முன்பு சிந்தித்து பேசவும். வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஆதரவற்றவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்தவித கடின சூழலையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு ஆகியவை முக்கியம். கால்நடைகளுக்கு தானம் வழங்குவது முக்கியம். தம்பதியர்களுக்கு இடையே காதல் உறவுகள் மலர இருக்கின்றன. இன்றைய நாளில் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஆதரவற்றவர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலையில் தியானம் செய்தால், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தங்கம், நிலம் போன்றவை சார்ந்து வணிகம் செய்வதற்கு சிறப்பான நாளாகும். இளம் வயதினர் தங்கள் பார்ட்னர்களை கவர முடியும். பாடகர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்தினர் போன்றவர்களுக்கு பெயர், புகழ், வாய்ப்பு போன்றவை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அரக்கு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு தக்காளி வழங்கவும்.

செப்டம்பர் 23 அன்று பிறந்த பிரபலங்கள் : குமார் சானு, பிரேம் சோப்ரா, தனுஜா, ராகுல் வைத்தியா, அம்பாதி ராயுடு, ராம்தாரி சிங் தின்கர்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி