ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 ஜூன் 2022) ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 ஜூன் 2022) ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 23 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் ஆர்வத்தை தூண்ட கூடிய நாளாக அமையும். போட்டிகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் பந்தயம் அல்லது பங்குச் சந்தையில் இருந்து விலகி இருப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் உங்களின் உணர்ச்சிகள் அதிர்ஷ்டத்தையும் ஆதரவையும் தர கூடும். உங்களின் வாழ்க்கைத்துணை இன்று உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார். அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், பரிசுகள், ஆதரவு கிடைக்கும். எனவே மகிழ்ச்சியான நாளாக அமையும். நடிப்பு, கலைப்படைப்பு, ஃபேஷன், விவசாயம் மற்றும் சொத்து நிர்வாகம் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் இன்று தனித்துவத்துடன் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்டமான நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்கள்: 1 மற்றும் 5

தானம்: ஏழைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2: ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

உங்கள் அதிர்ஷ்டம் உங்களின் தொழில் வாழ்க்கையில் இன்று சிறப்பாக வேலை செய்யும். ஆனால் தனிப்பட்ட உறவுகளில் மூன்றாவது நபர் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். பெண்கள் புதிய வேலை அல்லது வணிகத்திற்கு விண்ணப்பிக்க இந்த நாளைப் பயன்படுத்தி கொள்ளலாம். பெண்கள் இன்று புதிய தொழிலிலும் முதலீடு செய்யலாம். குழந்தைகளுக்கு இன்று தன்னம்பிக்கை பிறக்கும். இதற்கு, கடின உழைப்பு, அதிர்ஷ்டம் மற்றும் தொடர் பயிற்சி உதவும். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டு செயல்திறன் குறித்து பெருமைப்படுவார்கள். இன்று காதல் ஜோடிகளின் உறவு சிறப்பாக முன்னேறும். பொது கூட்டங்கள் மற்றும் பார்ட்டிகளில் இருந்து இன்று விலகி இருக்க வேண்டும். முக்கியமான நேர்காணல்களில் கடல் பச்சை நிற உடையை அணிவது அதிக அதிர்ஷ்டத்தைத் தரும். எதிர்கால திட்டங்கள் சிறப்பாக அமைய பெரியவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நடிகர்கள் சிறப்பான வெற்றியை இன்று பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6

தானம்: கோவிலுக்கு தேங்காயை தானம் செய்யுங்கள்

#எண் 3: ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

உங்கள் திறமை மற்றும் திட்டமிடல் மீது நம்பிக்கையுடன் இருங்கள். இன்று இரவு உணவிற்கு வெளியே செல்லுங்கள். குடும்பத்தினருடன் இன்று அவசியம் நேரம் செலவிட வேண்டும். படைப்பாற்றல் உள்ளவர்கள் முதலீடு செய்வதற்கும் லாபம் ஈட்டுவதற்கும் இது சிறந்த நேரம். புதிய முயற்சியைத் தொடங்கும் உங்கள் எண்ணம் இன்று வெற்றிகரமாக முடியும். விளையாட்டு வீரர்கள், பங்கு தரகர்கள், விமான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மதிய உணவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களைச் சந்திக்க வணிகர்கள் முயற்சி செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள் வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1

தானம்: ஆசிரமங்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 4: ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

நிலுவையில் உள்ள அல்லது தாமதமான பணிகள் இன்று முடிவடையும் . நிதி மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை செயலில் வைத்து, வருமானத்தை பெருக்கலாம். இன்றைய நாள் விரைவில் முழுமையடைந்ததாகத் தோன்றினாலும், காலையில் இருந்து வந்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவநம்பிக்கையான நட்பு அல்லது உறவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். இன்று அசைவம் அல்லது மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

இன்று பெரும்பாலான நேரத்தை பயணம், ஷாப்பிங், பார்ட்டி அல்லது கொண்டாட்டத்தில் செலவிடுவீர்கள். தொழிலில் மேம்பட்ட வளர்ச்சியைப் பெறவும், நேரத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று சுற்றுப்பயணம் செல்லவும், புதிய முயற்சிகளை எடுக்கவும், சொத்து வாங்கவும், போட்டிகளில் கலந்து கொள்ளவும் மிகவும் சிறந்த நாள். இன்று சகல வசதியுடனும் ஒரு சிறிய பயணம் செல்வீர்கள். இன்று நீங்கள் ஒரு சிறப்பு நபரை சந்திக்க நேரிடும். மேலும் இன்று நீங்கள் விரும்புவதை வாங்குங்கள், அது பெரியதாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, அனைத்தும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுக்கான அங்கீகாரம் கிடைக்க கூடிய ஒரு நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: குழந்தைகளுக்கு செடிகளை தானம் செய்யுங்கள்

#எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

மக்கள் உங்கள் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பொறுப்புகளை உங்களிடம் கொடுப்பார்கள். எனவே நீங்கள் இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் படிப்பு, புதிய வீடு, வேலை, புதிய உறவுகள், பண ஆதாயம், பயணம், விருந்து மற்றும் பல நல்ல விஷயங்கள் இன்று நடக்கும். உங்களின் அனைத்து இலக்குகளும் இன்று நிறைவேற்றப்படும். மேலும் உங்கள் அடையாளத்தை சிறப்பாக உருவாக்க வேண்டிய நேரம் இது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், தரகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டல் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் இன்று வெற்றியைத் தக்கவைக்க வேண்டும். இல்லத்தரசிகள் மற்றும் ஆசிரியர்கள் மரியாதை அதிகம் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொத்துப் பரிவர்த்தனைகள் எளிதாக நடக்கும். எதிர்பார்த்த திருமண திட்டங்கள் இன்று நிறைவேறும்

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்கள்: 6 மற்றும் 2

தானம்: குழந்தைகளுக்கு நீல நிற பென்சில் அல்லது பேனாவை தானம் செய்யுங்கள்

#எண் 7: (7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்  என்றால்):

இன்று குருவின் ஆலோசனைகளை கேட்டு மதித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். வியாபாரத்தில் ஆண்களுக்கு சிரமம் இருக்கலாம் ஆனால் பெண்கள் வளர்ச்சி காண்பார்கள். நம்பிக்கை மட்டுமே இன்று உங்களை வளர்த்தெடுக்கும் ஒரே காரணியாக இருக்கும். வீட்டில் இருந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் சிறந்த முடிவுகளை பெற மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்யுங்கள். இன்று சிறிய வகை பிராண்டுகள் அதிகம் பயனடைவார்கள். வழக்கறிஞர்கள் மற்றும் மென்பொறியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

தானம்: அனாதைகளுக்கு எழுதுபொருட்களை தானமாக வழங்கவும்

#எண் 8: ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

உங்களின் இலக்குகள் மிக அருகில் இருப்பதால், இலக்கை நோக்கிச் செயல்படுங்கள். கால்நடைகளுக்கு உணவளிக்க இது ஒரு அழகான நாள். காதல் உறவுகள் தம்பதிகளிடையே மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். மருத்துவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், நாடக கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இன்று பண பலன்களைப் பெறுவார்கள். இயந்திரங்கள், சரக்குகள், தளபாடங்கள் வாங்க, உலோகம் அல்லது நிலம் வாங்குவதில் முதலீடு செய்ய இன்று சிறந்த நாள். இன்றைய நாள் பரபரப்பாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே உங்களுக்காக சிறிது நேரம் செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: அனாதை இல்லத்தில் கடுகு எண்ணெய்யை தானமாக வழங்குங்கள்

#எண் 9: (9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

இன்று வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் தனிப்பட்ட வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள் அல்லது மருத்துவர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் அதிக மதிப்பை பெறுவார்கள். தங்கம் மற்றும் நிலம் போன்ற உலோகத்தில் தொழில் முதலீடு செய்வதற்கு இன்று உகந்த நாள். நிகழ்வில் கலந்துகொள்வது, பார்ட்டி நடத்துவது, நகைகளை வாங்குவது, ஆலோசனை வழங்குவது அல்லது விளையாட்டு போட்டியில் பங்கேற்பது போன்றவற்றை இன்று தைரியமாக செய்யலாம். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்கள்: 9 மற்றும் 6

தானம்: ஏழைகளுக்கு தக்காளியை தானம் செய்யுங்கள்

ஜூன் 23 அன்று பிறந்த பிரபலங்கள்: ரெஹ்மான், ராஜ் பப்பர், தன்மய் பட், வீரபத்ர சிங், என் பாஸ்கர் ராவ், பிரசாந்த் பூஷன்

First published:

Tags: Numerology