Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 ஜூன் 2022) ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 ஜூன் 2022) ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 20 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள், அப்படி இருந்தால் மட்டுமே பாதகமான சூழ்நிலைகளில் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். வணிகத்திற்காக வெளியூர் பயணங்களை திட்டமிடுவீர்கள். இன்று நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவித்தாலும், பணம் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் சவால்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பெற சூரியன் மற்றும் சிவன் ஆகியோரை வணங்க மறக்காதீர்கள். காதலை மறந்துவிட்டு இன்று வேலையில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் திங்கள்
அதிர்ஷ்ட எண் - 1

தானம் - சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நபரை நீங்கள் இன்று சந்திக்க நேர்ந்தால், எதிர்காலத்தில் அவரால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். எனவே உடனடியாக அவரை விட்டு விலகுங்கள். மனதை அமைதியாக வைத்து கொள்ள இன்று ஒரு சிறந்த நாள். உங்களின் முதலீட்டின் மீதான வருமானம் சராசரியாகவே இருக்கும். திரவங்கள், மின்னணுவியல், தானியங்கள், நகைகள், ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு இன்று எதிர்கால ஆதாயங்களுக்கான சிறப்பு அறிவிப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு இன்று பால் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் அற்புதமான ஆளுமை இன்று உங்களை சுற்றியுள்ளவர்களை கவர்ந்திழுக்கும். உங்கள் திட்டங்கள் இன்று எளிதில் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும் மற்றும் மரியாதை கூடும். நீங்கள் அரசியல்வாதியாக அல்லது அரசாங்க அதிகாரியாக இருந்தால் மக்களிடையே வெற்றி பெறுவீர்கள். இந்த நாளில் ஆவணங்கள் மற்றும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வருமானம் உங்கள் நிதி திட்டங்களின்படி இருக்கும் மற்றும் அனைத்து முடிவுகளும் உங்களுக்கு இன்று சாதகமாக இருக்கும். அரசாங்க உத்தரவுகளை முறியடிக்க பணம் இன்று முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்க. நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள மற்றும் மைல்கல்லை எட்ட சரியான நாள். சட்ட வழக்குகளை கையாளும் போது மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதில் கவனம் தேவை. ரிலாக்ஸாக இருக்க உடற்பயிற்சியில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சீனியர்களிடம் இன்று நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களை உணர்ச்சி ரீதியாக ஏமாற்றலாம். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். இன்றைக்கு பார்ட்டிகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - முதியோர் இல்லங்களுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பார்ட்னர்ஸை தேர்வு செய்வதில் இன்று கவனமாக இருங்கள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு இருந்தாலும், இவர்கள் சார்ந்த பெரிய பொறுப்புகளை தவிர்க்க வேண்டும். வாகனம், மொபைல், வீடு வாங்க அல்லது ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிட இன்று நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நாணயத்தை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பண பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் போது யோசித்து செயல்பட வேண்டும். சூரிய சக்தி, நகைகள், வாஸ்து, மருந்துகள், மென்பொருள், நடிப்பு, அரசியல், உணவு, உலோகம் உள்ளிட்ட துறைகளில் இன்று அதிக லாபம் கிடைக்கும். திருமண திட்டங்களை கருத்தில் கொள்வது நல்லது. இன்று சிவன் கோவிலுக்கு செல்வது உங்களுக்கு மிகவும் நன்மைகளை அளிக்கும். பெரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் அவர்களின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் மஞ்சள் துண்டு தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் பலருக்குத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள். ஆனால் உங்கள் பதவி மற்றும் பண பலத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னர் பணத்தை அதிகரிக்க உதவுவார். வெளிநாட்டிற்கு சென்று படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டும், ஏனெனில் அது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். நீங்கள் கடினமாக உழைப்பதால் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவைப்படுபவர்களுக்கு சமையல் எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் உங்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தாமல் தன்னலமின்றி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வளர்ச்சியை அதிகரிக்க உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய நாள். இன்று நீங்கள் என்ன செய்தாலும் அது சரியான முடிவு மற்றும் நல்ல பலன்களை கொடுக்கும். விளையாட்டு வீரர்களின் பெற்றோர் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். உங்களது இன்றைய பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - வீட்டு பணியாளர்களுக்கு சிவப்பு துணியை நன்கொடையாக கொடுங்கள்

ஜூன் 19-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ராகுல் காந்தி, சல்மான் ருஷ்டி, காஜல் அகர்வால், ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் கன்னா, யசோதரா ராஜே சிந்தியா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி