Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள்... ( மே 10, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள்... ( மே 10, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 10 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய காரியங்களை நிறைவேற்றுவதில் நம்பிக்கை பெரிய அளவில் பங்காற்றும். இன்று உங்களுக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும். பண வரவு கூடுதலாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீடு திரும்புவீர்கள். பெண்கள் தங்கள் சமையல் மூலமாக பிறர் மனதை வெல்லக் கூடும். சூரியக் கடவுளுக்கு தண்ணீர் படைத்து வழிபட்டால் நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3

தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நேர்மறையாக சிந்திக்கவும். வெற்றி நிச்சயம் என்பதால் அனைத்து காரியங்களையும் செயல்படுத்துங்கள். பணி மற்றும் தனி வாழ்க்கை இடையே சீரான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க சரியான நாள் ஆகும். முதலீடுகள் மீதான லாபங்களும் அதிகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் ஆரஞ்ச்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் புகழ் அடைவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால் உங்கள் திறன் மற்றும் அறிவை பொது இடத்தில் வெளிப்படுத்துங்கள். மாணவர்களுக்கு இன்று அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதே சமயம், உங்கள் வழிகாட்டிக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். கனிவான, இனிமையான சொற்களைப் பேசுவதன் மூலமாக உங்கள் பார்ட்னரின் மனதை கவரலாம். காதலை வெளிப்படுத்த சரியான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்ச் மற்றும் சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழப்பங்களை தவிர்க்க திட்டமிடுதல் அவசியம். இன்றைய நாளில் அனைத்தும் கனக்கச்சிதமாக நடக்கும். இன்று மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்க சிறிது காலம் ஆகும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர் என்றால் கவனமுடன் இருக்கவும். மூத்தவர்களிடம் இதுதொடர்பாக அறிவுரையை கேட்கலாம். உடலை குளுமையாக வைத்திருக்க சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எல்லாம் நல்லபடியாக நடக்கும். குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும். சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்றைக்கு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் அசைவம் ஆகியவற்றை தவிர்க்கவும். சொத்து சார்ந்த முடிவுகள் சாதகமான பலனை தரும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு செடிகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கற்பனைத் திறன் சார்ந்த வணிகத்திற்கு இன்று வாய்ப்பு கிடைக்கும். இன்று எல்லா வளமும் உங்களுக்கு கிடைக்கும். சிறந்த பார்ட்னரை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். குழந்தைகளை நினைத்து பெற்றோர் பெருமைப்படுவார்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். வாகனம், மொபைல் மற்றும் வீடு வாங்குவதற்கு சிறந்த நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நாணயத்தை தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். ஆகவே வணிகம் சார்ந்த விஷயங்களில் சாதூர்யமாக செயல்படவும். எதிர் பாலினத்தவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்க தயாராக இருங்கள். வழக்கறிஞரின் அறிவுரையைப் பெறுவது பணத்தை சேமிக்க உதவியாக இருக்கும். திருமணத்திற்கு பொருத்தமான வரன் இன்று கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு பாத்திரம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்தவொரு சூழலையும் அனுசரித்து பணி செய்யவும். இறுதியில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இன்று சில விஷயங்களில் இருந்து தப்பிக்க உங்கள் அறிவு மற்றும் பணத்தை பயன்படுத்தவும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது புகார் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் அடர்த்தியான நிறம் கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவையானவர்களுக்கு காலணி தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தம்பதியர் எதிர்காலத்திற்கு திட்டமிட இன்று உகந்த நாளாகும். விமானப் போக்குவரத்து, சாஃப்ட்வேர், மியூஸிக், மீடியா மற்றும் கல்வித் துறையில் பணி செய்பவர்களுக்கு இன்று புகழ் கிடைக்க இருக்கிறது. எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சு வாய்ப்பு, நேர்காணல் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவும். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு பருப்பு தானம் செய்யவும்.

மே 10 அன்று பிறந்த பிரபலங்கள் : வி.கே.சிங், ஸ்ரீமுகி, ஹ்ரிஷிதா பட், நயன்தாரா சாஹல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி