Home /News /spiritual /

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று கடந்த கால உழைப்பிற்கு பணப் பலன் கிடைக்கும் (மே 31, 2022)

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று கடந்த கால உழைப்பிற்கு பணப் பலன் கிடைக்கும் (மே 31, 2022)

மாதிரி படம்

மாதிரி படம்

Numerology | மே 31 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மகிழ்ச்சியை பெறுவதற்கு உங்கள் சொந்த இலக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கு சிறப்பான நாளாகும். முற்றிலும் உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்று நடைபெற இருக்கிறது. சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது சுமூகமாக நடைபெறும். அரசியல் கட்சியினருக்கு தலைமை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடம் இருந்து குழந்தைகள் பாராட்டு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்கள் சக பெண்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டுப் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும். உங்கள் உணர்வுகளையும், இலக்கையும் மட்டுப்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். உங்கள் சுயமரியாதையை அவமதிக்கும் ஒருவரை நீங்கள் சந்திக்கக் கூடும். ஆகவே கவனமாக இருங்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள், அரசியல் கட்சியினருக்கு இன்று ஏற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் எண்ணெய் தானம் செய்ய வேண்டும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய பன்முகத்தன்மை மற்றும் கவர்ச்சிகரமான செயல்பாடு ஆகியவை உங்கள் மீது மற்றவர்களை பொறாமை கொள்ள வைக்கும். இன்று நீங்கள் நிறைய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணியிடங்களில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சின் மூலமாக பிறரது கவனத்தை ஈர்ப்பீர்கள். அரசு ஊழியர்கள் சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பணிப்பெண்ணுக்கு குங்குமப்பூ தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். எதிர்காலத்தில் அது உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளக் கூடாது. உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்து வாங்கும் முயற்சியை ஒத்திவைக்கவும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாள் ஆகும். சைவ உணவை சாப்பிடுங்கள். தியானம் செய்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்களை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கிளாமர் மற்றும் மீடியா துறையில் இருப்பவர்கள் இன்றைக்கு எல்லையில்லா வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். வானத்தை தொடுவதற்கான நாள் இதுவாகும். தனி வாழ்க்கையில் காதல் உணர்வுகள் வெளிப்படும். பழைய நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் உதவி கேட்கக் கூடும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும். விற்பனை பிரிவில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சைக் காய்கறிகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் காதல் உணர்வு மிகுந்ததாகவும், வாய்ப்புகள் நிறைந்ததாகவும் இருக்கும். குடும்பத்தின் அன்பு கிடைப்பதால் வசதியான வாழ்க்கை ஒன்றை நீங்கள் உணருவீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிட சரியான தருணம் ஆகும். நடிகர்கள் மற்றும் மீடியா ஊழியர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். புதிய வீடு அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு பால் கலந்த இனிப்புகளை தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நேரத்தை வீணடிக்காதீர்கள். சௌகரியமான சூழலில் இருந்து வெளியே வந்து முயற்சி செய்யவும். உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிய உறவுகள் மலரும் மற்றும் எதிர் பாலினத்தவர் மூலமாக உங்களுக்கான அதிர்ஷ்டம் தேடி வரும். கனிவாகப் பேசினால் இன்றைக்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு பங்குச் சந்தையில் அதிக லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கடந்த கால உழைப்பிற்கு இன்றைக்கு பணப் பலன் கிடைக்க இருக்கிறது. பெரிய முடிவுகளை எடுக்கும் போது இலகுவாக செயல்படவும். உங்கள் நல்லெண்ணம் மற்றும் சமூக தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாக வெற்றி கிடைக்க இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் செலவு செய்வீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் புகழ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழம் தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் பழைய நண்பர்களை சந்தித்து, உங்கள் கடந்த கால இனிமையான நிகழ்வுகளை நினைவுகூரலாம். காதலில் இருக்கும் நபர்கள், தூது வரும் நபர்கள் குறித்தும், அவர்களின் நோக்கம் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். இன்றைய நாள் முழுவதும் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க, நேர்காணலில் பங்கேற்க அல்லது அரசு ஆணைகளுக்கு பதில் அளிக்க இன்று சிறப்பான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - பணிப்பெண்களுக்கு மாதுளம்பழம் தானமாக கொடுக்கவும்.

மே 31 அன்று பிறந்த பிரபலங்கள் : கிருஷ்ண தாஸ், அஹில்யாபாய் ஹோல்கர், வீர தாஸ், சுப்ரதோ பாக்சி, கல்பனா ஆஸ்மி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி