ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 செப்டம்பர் 2022) கோவிலில் நல்லெண்ணெய் வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 செப்டம்பர் 2022) கோவிலில் நல்லெண்ணெய் வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 29-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று கோபத்தை கட்டுப்படுத்தி அமைதி காக்கவும். பெரும் அமைப்புகளுடன் நீங்கள் கொண்டிருக்கும் தொடர்பு வெற்றிகரமானதாக அமையும். புதிய வழிகாட்டி ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மதிய உணவில் இனிப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அறிவை பயன்படுத்தி புதிய முதலீடுகளை செய்து, அதன் மூலமாக பலன் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம் மற்றும் வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் நல்லெண்ணெய் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்வுகளையும், காதல் எண்ணங்களையும் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய நாள் இது. அதை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அரசு ஒப்பந்தங்களை பெற வாய்ப்பு இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் நேரடி பேச்சுவார்த்தை நல்ல பலனை தரக் கூடும். இன்றைக்கு உங்கள் திட்டங்களுக்கு ஒரு உருவம் கிடைக்கத் தொடங்கும். நண்பர்கள் மற்றும் பாஸ் ஆகியோரின் ஆதரவுடன் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு உணவு அளிக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

போட்டி, பொறாமைகளை கைவிடவும். உங்கள் பயிற்சியாளர் மீது நம்பிக்கை வைத்து, அவர் சொல்வதை பின்பற்றி நடந்தால் நல்ல பலன் கிடைக்கக் கூடும். சமூகத்துடன் கலந்து பழகவும், நண்பர்களை ஈர்க்கவும் சிறப்பான நாளாகும். உயர் கல்வி பயிலுபவர்கள் உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் போன்றோருக்கு பணப்பலன் கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் குங்குமம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மிகப் பெரிய குழப்பங்கள் முடிவுக்கு வருவதால் அது உங்களுக்கு நிம்மதியை தரக் கூடும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டி, அதை செயல்படுத்த தொடங்குவீர்கள். ஆலோசனை மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவீர்கள். தனிப்பட்ட உறவுகள் குழப்பங்கள் எதுவும் இன்றி சிறப்பாக அமையும். காவி நிற இனிப்புகள் சாப்பிடவும். சுற்றத்தாருடன் மனம் விட்டு பேசவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு தானியங்களை வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கண்கள் குறித்து நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். கால மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும். உணர்ச்சிவசப்பட்டு உங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். இன்றைய முதலீட்டுத் திட்டங்கள் நல்ல பலனை தரும். சொத்து ரீதியான முடிவுகளும் சரியாக அமையும். பயணத்தின் மீது நாட்டம் உள்ளவர்கள் சுற்றுலா செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற பழங்களை வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் ஜோடிகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை மிக அதிகமாக இருக்கும். இன்று உங்கள் புகழும், மகிழ்ச்சியும் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வணிகம் சார்ந்து வெற்றிகரமான முடிவெடுக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பால் வைக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எண்ணற்ற பொறுப்புகள் இருந்தாலும், அனைத்தையும் சரியான நேரத்திற்கு முடிப்பீர்கள். நிதி விவகாரங்கள், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரியவர்களின் அறிவுரையை கடைப்பிடிக்கவும். வணிகத்தில் பார்ட்னர் அல்லது வாடிக்கையாளர்களுடன் இன்று சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். திருமண ஏற்பாடுகளை பரிசீலனை செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு சாதம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விலங்குகளுக்கு உணவளித்தால் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் அமைதி ஆகியவை வாழ்வில் தேடி வரும். ஆகவே, விலங்குகளை துன்புறுத்தாமல், அவற்றுக்கு சேவை செய்யவும். நீங்கள் சோர்வாக உணரும் தருணங்களில் உங்கள் சமூக தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். வணிகம் சார்ந்த விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை மிக முக்கியமானது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அங்கும், இங்கும் அலைய வேண்டியிருக்கும் என்பதால், இன்று வீட்டில் இருந்து பணி செய்வது சற்று கடினமாக இருக்கும். குழுவாக பணி செய்கையில் உங்கள் பொறாமைகளை ஒதுக்கி வைக்கவும். புதிய இடத்திற்கு புலம்பெயர்ந்து செல்ல விரும்புபவர்கள், புதிய வேலை தேடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இன்று அமையும். அரசியல், மீடியா, விளையாட்டு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பெரும் வளர்ச்சி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சை எடுக்கும் பெண்ணுக்கு வளையல்கள் வழங்கவும்.

செப்டம்பர் 29 அன்று பிறந்த பிரபலங்கள் : மஹமூத், ஷ்ரதாஸ்ரீநாத், சையது அலி ஷா கிலானி, சமீர் சோனி, தர்ஷன் ஜாரிவாலா, ராஜேஷ் மிஸ்ரா

Published by:Selvi M
First published:

Tags: Numerology