Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (4 ஜூன் 2022) தயிர் தானம் செய்தால் நல்லது..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (4 ஜூன் 2022) தயிர் தானம் செய்தால் நல்லது..!

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | ஜூன் 4 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் ஒரு டீமுக்கு லீடராக இருந்தாலும் உங்கள் டீம் மெம்பர்ஸ்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு வளைந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள். சட்ட விஷயங்கள், வீட்டை புதுப்பித்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் முதலீடுகள் இயந்திரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவது அதிக வருமானத்தை தரும். ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து குழந்தைகள் பாராட்டுகளைப் பெறுவார்கள். இன்று நீங்கள் செய்ய வேண்டியது வார்த்தைகளை கடுமையாக சொல்லாமல் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி மற்றும் ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்வை வெளியே யாரிடமும் வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமான அல்லது ரகசியத் தகவலை இ-மெயில் அனுப்ப விரும்பினால் கவனமாக இருங்கள். உங்களை புண்படுத்த கூடிய ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள், எனவே கவனமாக இருங்கள். ஏற்றுமதி இறக்குமதி, ரசாயனம், கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உச்சத்தை காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பறவைகள் அல்லது கால்நடைகளுக்கு நீர் வழங்குங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் குழப்பத்தை எதிர்கொண்டாலும் உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள், இசைக்கலைஞர்கள், மின்னணு ஊடகங்கள், ஆட்டோமொபைல் தொழிலதிபர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாக மாறும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 3

தானம் - பெண் உதவியாளருக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து உழைத்து வருவதால் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பரபரப்பான நாள். மருத்துவம் மற்றும் விவசாயத் துறையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு பச்சை வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் வார்த்தைகள் மற்றவர்களின் உணர்ச்சிகளை புண்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்களிடம் ஒரு நண்பர் அல்லது உறவினர் உதவி கேட்டால் தயங்காமல் செய்ய வேண்டும். மாணவர்கள் இன்று தங்கள் கல்வி சாதனைகளை அனுபவிக்கும் நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - இன்று பிறருக்கு பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் உங்கள் திட்டத்தை துல்லியமாக முன்னெடுத்து செல்வீர்கள். உங்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் வெற்றியை உருவாக்குபவராக இன்று நீங்கள் இருப்பீர்கள். இன்று வெற்றியை கொண்டாடுவதற்கும் சிறந்த நாள். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய வாய்ப்புகளை ஆராயவும் சிறந்த நாள். புதிய ஆலை அமைக்க நிலம் தேடுபவர்கள், ஒரு நல்ல விருப்பத்தை தேர்வு செய்ய முடியும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களை நம்புவதை நிறுத்துங்கள். வீட்டு பெரியவர்கள் மற்றும் முன்னோர்களின் ஆசியுடன் மட்டுமே விளையாட்டு, சட்ட வழக்குகள், வணிக ஒப்பந்தங்கள், நேர்காணல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி சாத்தியமாகும். குரு மந்திரத்தைப் படித்து, கோபத்தை கட்டுப்படுத்துங்கள் . மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகளை மட்டுமே இன்று பேசுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் எந்த சூழலிலும் வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பு மற்றும் நல்லெண்ணத்தின் உதவியுடன் நாள் முடிவில் வெகுமதி பெறுவீர்கள். மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். பொது பிரமுகர்கள் மாலைக்குள் பண பலன்களை அடைவார்கள். உடற்பயிற்சிகளில் நேரத்தை செலவிடுவது ஆரோக்கியத்தை சீராக வைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஒரு பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் முழுவதும் வளர்ச்சி, திடீர் பண வரவு அல்லது வெற்றி உங்களுக்கு கிடைக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்று ஒரு அற்புதமான நாள். பொதுப் பேச்சாளர்கள், சமையல்காரர்கள், ஊடக நண்பர்கள் நடிகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - வீட்டில் பணிபுரியும் பெண் உதவியாளருக்கு சிவப்பு வளையல்களை நன்கொடையாக கொடுங்கள்

ஜூன் 4-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: அனில் அம்பானி, கிருஷ்ண ராஜா வாடியார், மறைந்த பாடகர் எஸ்பிபி, அசோக் சரஃப்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி