Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (26 ஆகஸ்ட் 2022) ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (26 ஆகஸ்ட் 2022) ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 26-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் அதிகாரம் மற்றும் செல்வத்தை அடைவதற்கான உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். புதிய நண்பர்களை உருவாக்க அல்லது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்ய, புதிய வேலை, புதிய வீடு போன்றவற்றை இன்று தொடங்க விரும்பினால் கோபத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் தாமதம் ஏற்படும். விவசாயம் மற்றும் கல்வி தொழில் லாபம் தரும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளிடம் அதிக பொறுமை தேவைப்படும் நாள். உங்கள் கடின உழைப்பும் நேர்மையும் தான் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்பதை புரிந்து நடந்துகொள்ளுங்கள். உங்கள் அப்பாவித்தனத்தை மக்கள் தவறாக பயன்படுத்த கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், டிராவல் ஏஜென்சிகள், பங்குச் சந்தை மற்றும் பார்ட்னர்ஷிப் நிறுவனங்களுக்கு மாலைக்கு பின் வெற்றி வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் - கிரீம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களது தனித்துவ ஆளுமை மற்றும் உங்கள் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் பேச்சுக்கள் உங்கள் சுற்றத்தாரை ஈர்க்கும். டிசைனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் பெயர் மற்றும் புகழை பெற சிறந்த நாள். கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்ய ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - கோவிலில் ஒரு பண தாவரத்தை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உடல்நலம் அல்லது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உயர் பதவியில் இருப்பவர்கள் இன்று சிலரின் சதியையும் எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்களின் செயல்திறனுக்காகவும் நீங்கள் இன்று பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய் மற்றும் வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - தேவைப்படுவோருக்கு பாதணிகளை தானமாக வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களது பாதையில் வரும் தடைகளை குறைப்பதில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும். யாரிடம் பேசினாலும் கவனம் தேவை. சொத்துக்களை விற்க, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட சிறந்த நாள். மென்பொருள் பொறியாளர்கள், இயக்குநர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாளை சிறப்பாக முடிக்க பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு ஒரு சாதகமான நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வேலையில் மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். உங்களது நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடும் என்பதால் அனைத்து வகையான நன்மைகளையும் அனுபவிக்க தயாராக இருங்கள். வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களுக்கு பாராட்டுக்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு தயிர் சாதம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் குறிக்கோளற்றதாகவும், சலிப்பாக துவங்கினாலும் மதியத்திற்கு பின் சுவாரசியமான நாளாக இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிதூண்கள் குறிப்பாக இன்று இரவு விருந்துகளில் இருந்து விலகி இருங்கள். எதிர் பாலினத்தவர்கள் மற்றும் பெரியவர்கள் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பதில் முக்கியமானவர்களாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - விலங்குகளுக்கு உணவு வழங்குங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிக பொறுப்புகளை ஏற்க முடியாத அளவுக்கு இன்று நீங்கள் பிசியாக இருப்பீர்கள். வணிகர்கள் பெரிய பிராண்டுகளுடன் இணைந்து செயல்பட முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். பிறரிடம் பேசும் போது பேச்சில் மென்மையை கடைபிடிக்க மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு போர்வைகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நன்மைகள், வாய்ப்புகள் புகழ், வேடிக்கை, ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்த நாள். உங்கள் இலக்கை நோக்கி செல்ல இன்று ஏற்ற நாள். நிதி ஆதாயம் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும். நடிகர்கள், ஹீலர்கள், பயிற்சியாளர்கள், நகைக்கடைக்காரர்கள், ஆலோசகர், அறுவை சிகிச்சை நிபுணர், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் புகழ் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஒரு சிவப்பு கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 26-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மேனகா காந்தி, அன்னை தெரசா, ரூபினா திலாய்க், பல்லவி ஜோஷி, சேகர் குப்தா, மாதுரி பண்டார்கர், பன்சிலால், ஹர்பஜன் சிங் கல்சா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி