ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (26 செப்டம்பர் 2022) கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (26 செப்டம்பர் 2022) கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 26-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகள் அழகானதாக மாறும். அதிகாரம் அடைய வேண்டும் மற்றும் பணம் ஈட்ட வேண்டும் என்ற உங்கள் இலக்கு நிறைவேறும். ஆனால், அதற்கு அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தேவை. புதிய நண்பரை தேடுகிறீர்கள், புதிய வேலையை விரும்புகிறீர்கள், புது வீடு பார்க்கிறீர்கள் என்றால் கோபத்தை ஒத்திவைத்துவிட்டு, குடும்பம் மற்றும் சமூக தொடர்புகளின் ஆதரவை பயன்படுத்திக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆசிரமத்தில் உடைகளை வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளில் இன்று மிகப் பெரிய முதிர்ச்சி நிலை காணப்படும். உங்கள் கடின உழைப்பும், நேர்மையும் தான் வெற்றிக்கான ரகசியம் ஆகும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் புத்திகூர்மையுடன் நடந்து கொள்ளவும். பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மாலையில் பெரும் வெற்றி காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - அரக்கு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு தயிர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் உங்கள் பெற்றோரின் பாதங்களை தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளவும். மதி மயக்கும் உங்களுடைய பேச்சு என்பது நிறுவனத்தில் உள்ள மூத்த அதிகாரிகளையும், வீட்டில் உள்ளவர்களையும் கவருவதாக அமையும். எந்தவொரு சூழ்நிலையையும் அனுசரித்து வேலை செய்யும் உங்களுடைய திறனுக்கு வெற்றி தயாராக உள்ளது. உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் வயலெட்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5 மற்றும் 6

தானம் - கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பசுமையான சூழலில் பொழுது கழிக்கவும். இன்று உங்களுக்கு அதிக அளவில் பணவரவு உண்டு என்றாலும், உங்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்கள் சார்ந்து மருத்துவ செலவுகள் ஏற்படும். இன்றைக்கு அசைவ உணவுகள் மற்றும் மது ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்கவும். அரசு வேலை கிடைக்க சாதகமான சூழல் இருப்பதால், அதை விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா மற்றும் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு உணவு வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்டத்தின் சக்கரங்கள் உங்களை நோக்கி சுழன்று வருகின்றன. பிறரிடம் உங்கள் திறனை வெளிக்காட்டுவீர்கள். உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாளாகும். பங்குகள், நிலம் போன்றவற்றை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும். செய்தி வாசிப்பாளர்கள், நடிகர்கள் போன்றோருக்கு பாராட்டு கிடைக்கும். பேச்சில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பழங்கள் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணி சார்ந்து இன்று மாபெரும் வாய்ப்புகள் கூடி வரும் நாளாகும். தனியாக செய்வதைக் காட்டிலும், குழுவாக இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தயாராக இருக்கவும். குடும்பத்தின் ஆதரவு மற்றும் அவர்கள் அளிக்கும் மரியாதை சந்தோஷத்தை கொடுக்கும். இல்லத்தரசிகள் பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 5

தானம் - ஏழைகளுக்கு தயிர் சாதம் கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் சற்று மந்தமாக தென்பட்டாலும், மதியத்திற்கு பிறகு புதிய வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். வாழ்க்கையில் உறவுகள் பலப்படும், பண வரவு மேம்படும். ஆரோக்கியமற்ற உணவு எடுத்துக் கொள்வது குறித்து கவனமுடன் இருக்கவும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றியும், புகழும் கிடைக்கும். எதிர் பாலினத்தவர் மூலமாக அதிர்ஷ்டம் கை கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கோவிலில் வெண்கலப் பாத்திரம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிக பொறுப்புகள் குவிந்துள்ளதால் நீங்கள் பிஸியாக உணருவீர்கள். வணிகத்தில் பெரும் பிராண்ட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள். உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் விசுவாசியாக இருப்பதால் தலைமைத்துவ பண்பை நீங்கள் உணரக் கூடும். ஆரோக்கியமான வாழ்வியலை முன்னெடுப்பதுடன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவும். கனிவாக பேசினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு போர்வை மற்றும் காலணி கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நடிகர்கள், பயிற்சியாளர்கள், மருத்துவர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாள் ஆற்றல் மிகுந்ததாகவும், உற்சாகம் உடையதாகவும் இருக்கும். நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும் மற்றும் பத்திரப்பதிவுகள் இன்று நடக்கும். நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் உறவுகள் மலரும்.

அதிர்ஷ்ட நிறம் - அரக்கு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் குங்குமம் வழங்கவும்.

செப்டம்பர் 26 அன்று பிறந்த பிரபலங்கள் :

ஐஸ்வர் சந்த் வித்யாசாகர், மன்மோகன் சிங், சுங்கி பாண்டே, நிகி அனே வாலா, தேவ் ஆனந்த், வித்யா வோக்ஸ்,

Published by:Selvi M
First published:

Tags: Numerology