Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 செப்டம்பர் 2022) கோவிலில் மஞ்சள் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 செப்டம்பர் 2022) கோவிலில் மஞ்சள் தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 19-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு மிக உற்சாகமான நாள், அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் திறமைகள் மூலம் பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது எளிதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீடு திரும்புவார்கள். இன்றைய நாள் காதல் உணர்ச்சிகளால் வாழ்க்கையை நிரப்பும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் திங்கள்
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் மனதில் மறைத்திருக்கும் பழைய நினைவுகளை நாளின் முதல் பாதி நினைவுபடுத்த கூடும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்க வேண்டும். குடும்பத்தினருடன் இன்றைய நாளை நீங்கள் செலவிட வேண்டும். மின்னணுவியல், தானியங்கள், நகைகள், ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிகளில் உள்ளவர்கள் இன்று லாபமடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும் என்றாலும் உங்களுக்குள் எழும் பாதுகாப்பின்மை உணர்வு உற்சாகத்தை தடுக்கும். அரசியலில் உள்ளவர்கள் அல்லது அரசு அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றி பெறுவார்கள். இன்று நேர்காணல்களில் கலந்து கொள்ள ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் மஞ்சள் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் இலக்குகளை எட்ட இன்று சரியான நாள். நீங்கள் சட்ட வழக்குகளை கையாள்கிறீர்கள் என்றால் மற்றவர்களின் ஆலோசனையை கவனமாக கேளுங்கள் ஆனால் இறுதியாக உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நடங்கள். மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்ளுங்கள், உடற்பயிற்சியில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு காலணிகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சக ஊழியர்கள் உங்களை உணர்ச்சி ரீதியாக ஏமாற்ற கூடும் என்பதால் பணியிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள். சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். பார்ட்டிகளில் பங்கேற்பது மற்றும் அசைவம் சாப்பிடுவதை இன்று தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - முதியோர் இல்லங்களுக்கு மர கன்றுகளை வழங்குங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் மிகப்பெரிய பலவீனம் அனைவரையும் நம்புவது தான். எனவே பார்ட்னர்களை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவது முக்கியம் என்றாலும் அவர்களின் பொறுப்புகளை இன்று நீங்கள் சுமப்பதை தவிர்க்க வேண்டும். அரசு டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க போதுமான அதிர்ஷ்டம் இருக்கும். வாகனம், மொபைல், வீடு வாங்க அல்லது சிறு பயணத்தைத் திட்டமிட நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஆசிரமங்களில் இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாள் என்றாலும் அதிக லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் போது புத்தி கூர்மையை பயன்படுத்துங்கள். பெரியவர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். மென்பொருள், பாதுகாப்பு, தங்கம், பெட்ரோல் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் இன்று வெற்றிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் பலருக்கு லீடராக இருந்தாலும் விறைப்புடன் இருக்க வேண்டாம். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகளை தீர்த்து கொள்வீர்கள். நீங்கள் கடின உழைப்பாளி என்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் பெரும்பாலும் சரியானதாக அமையும். இன்று ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால் அதை ஒத்தி வைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - துளசி செடியை நண்பருக்கு தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தங்கள் ஆளுமையின் சக்தியை அதிகரிக்க பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும். உங்கள் கையில் அதிகாரம் இருந்தால் அதை தவறாக பயன்படுத்த வேண்டாம். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். மென்பொருள், அமானுஷ்ய அறிவியல், இசை, ஊடகம் அல்லது கல்வி துறையில் உள்ளவர்கள் பிரபலமடைவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பொருளாதார ரீதியாக இன்று சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - தேவைப்படுவோருக்கு சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 19-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: இஷா கோபிகர், லக்கி அலி, காவ்யா மாதவன், ஆகாஷ் சோப்ரா, சலில் சவுத்ரி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி