Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 ஆகஸ்ட் 2022) கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 ஆகஸ்ட் 2022) கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 19-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிகாலை பொழுது சற்று மந்தமாக தொடங்கினாலும், எஞ்சியுள்ள பொழுதில் முழுமையான ஆற்றல் மற்றும் ஊக்கம் ஆகியவை நிறைந்திருக்கும். இன்று அனைத்து பொறுப்புகளையும் நிறைவு செய்வீர்கள். இன்று பணம் லாபம் கிடைக்கும் மற்றும் இலக்குகளை அடைவீர்கள். உங்கள் மண வாழ்க்கையில் இன்று காதல் நிரம்பியிருக்கும். மகிழ்ச்சிகரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9
தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகள் மற்றும் வணிகம் சார்ந்த பந்தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கான நாள் இதுவாகும். அப்பாவித்தனம் மற்றும் அன்பு கலந்த உங்களுடைய பழைய நினைவுகளை உங்கள் மனம் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும். இன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை செலவிடவும். முதலீடுகளில் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே வீடு வாங்குவது அல்லது சொத்து வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - பிச்சைக்காரர்களுக்கு பால் தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய அறிவுத்திறன் மற்றும் திறமைக்கு இன்றைய தினம் சமூகத்தில் இருந்து பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். ஆனால், நீங்கள் அதை கொண்டாடக் கூடிய மனநிலையில் இருக்க மாட்டீர்கள். அரசியல் கட்சி நிர்வாகிகள் அல்லது அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் பெரும் திரள் கூட்டத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பாக அல்லது நேர்காணலுக்கு செல்லும் முன்பாக குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கோபத்தை கட்டுப்படுத்துங்கள். தகவல் தொடர்புகளை மேம்படுத்தி, இலக்கை அடைவதற்கான சிறப்பு மிகுந்த நாளாகும். அரசு ஆணைகளை பெறுவதில் பணம் முக்கிய பங்காற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான நேரம் என்பது கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் செலவிடப்படும். சட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்கள், பிறருடைய அறிவுரையை கேட்காமல் மனம் சொல்வதை கேளுங்கள். உடற்பயிற்சி செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - விலங்குகளுக்கு உணவு தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து விடுங்கள் அல்லது தற்போதைய உறவுகளை இழக்க வேண்டியிருக்கும். இன்று புதிய வாய்ப்பு, புதிய ஒப்பந்தங்கள் அல்லது தலைமை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். சக பணியாளர்கள் உணர்வு ரீதியாக உங்களை முட்டாளாக்க கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள். இன்றைக்கு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - முதியோர் இல்லங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முடிவுகளை எடுப்பதில் உங்களின் ஆறாம் அறிவை பயன்படுத்த வேண்டிய நேரம் இது. அனைத்து மக்களையும் நம்ப வேண்டும் என்ற சிந்தனை தான் உங்களின் பலவீனம். ஆகவே, யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து, பார்ட்னர்களை தேர்வு செய்வதில் சாதுர்யமாக செயல்படுங்கள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கிறது என்றாலும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் வெள்ளிக்காசு தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் பரிந்துரைகளை சக ஊழியர்களிடத்தில் முன்வைக்கவும். இன்று ஏற்ற, இறக்கங்கள் இரண்டும் கலந்து இருந்தாலும் கூட, இறுதியாக நல்ல லாபம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளை செய்யும்போது உங்கள் சாதுர்யத்தை பயன்படுத்தவும். வழக்கு ஆவணங்களை மீண்டும் சரிபார்க்கவும். மூத்தவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள். எதிர் பாலினத்தவரின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் மஞ்சள் துணி தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று இயல்புக்கு மாறான ஆற்றல் உங்களிடம் நிறைந்து காணப்படுகிறது. அதை பயன்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்த வேண்டும். நீங்கள் தலைவனாக இருந்து, பலருக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் உள்ளீர்கள். ஆனால், இறுக்கமான மனநிலையுடன் செயல்பட வேண்டாம். சக்திவாய்ந்த மனிதர்கள் அல்லது பண பலத்தின் மூலமாக சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். மாணவர்களின் கனவுகள் நனவாகும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவை உள்ளவர்களுக்கு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திறமை இன்று வெளிப்படும். இன்று உயர் அதிகாரிகளின் தொடர்பு மூலமாக வளர்ச்சி ஏற்படும். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள் மிக இலகுவாக கையெழுத்தாகும். இளைஞர்களுக்கு இன்று முதல் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கனக்கச்சிதமாக இருக்கும். ஆகவே, இன்று போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம் அல்லது நேர்காணல்களுக்கு செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 19 அன்று பிறந்த பிரபலங்கள் : சத்ய நாதெல்லா, சுதா மூர்த்தி, பில் கிளிண்டன், நந்தனா சென், கோவிந்த் நிலானி, விஜய் குமார்,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி