Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 ஆகஸ்ட் 2022) கோவிலில் மஞ்சள் தானமாக கொடுக்கவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 ஆகஸ்ட் 2022) கோவிலில் மஞ்சள் தானமாக கொடுக்கவும்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 17-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களின் ஆதரவுடன் மட்டுமே நீங்கள் இலக்குகளை நிர்ணயிக்க முடியும். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க இருக்கிறது. புதிய பணியிடத்தில் சேருவது, புதிய நண்பர் கிடைப்பது, புதிய வேலை கிடைப்பது, புதிய வீடு வாங்குவது போன்றவை தாமதம் ஆகும். பணப் பலன்கள் பிரச்சனை இன்றி மிதமான அளவில் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமத்தில் உணவு தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் டேபிள் மீது இரண்டடுக்கு மூங்கில் செடி வைக்கவும். இன்று திறந்த மனதுடன் செயல்பட வேண்டாம். உங்கள் அப்பாவித்தனம் மற்றும் உதவும் குணத்தை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் கவனமாக இருக்கவும். சில சமயம் இல்லை என்று சொல்லுங்கள். உங்கள் புத்திகூர்மையை பயன்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சக பணியாளர்களின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனை திறன் மற்றும் மதி மயக்கும் பேச்சு ஆகியவை உங்கள் மேல் அதிகாரியை ஈர்க்கும். அனைத்து சூழல்களையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள் என்பதால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. பணத்தை கையாளுகையில் கவனமுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகத்தில் உத்திகளை மாற்றிக் கொண்டீர்கள் என்றால் வளர்ச்சி நிச்சயம். அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்கள் இலக்குகளை நோக்கி நிலையாக பயணிக்க வேண்டும். பணம் சார்ந்த விஷயங்களில் திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணி தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள் என்றால் வெற்றியை அடையவும், பணியில் திருப்தி கிடைக்கவும் மிக கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் காதல் உணர்வுகளை பார்ட்னருடன் பகிர்ந்து கொள்ளலாம். இயந்திரங்கள் வாங்க, சொத்துக்களை விற்பனை செய்ய, ஆவணங்களில் கையெழுத்திட சிறப்பான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆசிரமங்களில் உப்பு தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சௌகரியமான விஷயங்களும், வாய்ப்புகளும் கிடைக்கும். நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தயாராக இருக்கவும். குடும்பத்தின் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவை காரணமாக வளங்கள் வந்து சேரும். அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் போன்றோருக்கு சிறப்பான உயர்வு கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பர்சிஸ் எப்போதும் காப்பர் நாணயம் ஒன்றை வைத்துக் கொள்ளவும். பழைய சொத்துக்களை கொண்டு பணம் திரட்டலாம். உறவுகளை கொண்டாடுவதற்கான நேரம் வெகு விரைவில் வர இருக்கிறது. வணிகத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எதிர் பாலினத்தவரால் நன்மை சேரும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - அனாதை குழந்தைகளுக்கு துணிகளை தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். எந்நேரமும் எதையாவது அதிகப்படியாக சிந்தித்துக் கொண்டிருக்காமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். உடல் நலன் குறித்து கவனமாக இருக்கவும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்கவும். பசுமை கார்டனில் கொஞ்சம் பொழுதை கழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு உணவு தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சாட்டிங் செய்வது, புத்தகம் வாசிப்பது, திட்டமிடுவது, உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகளை செய்வது போன்றவற்றின் மூலமாக இன்றைய பொழுது கழிந்துவிடும். ஆடிட்டர்கள், விஞ்ஞானிகள், அறுவை சிகிச்சை நிபுணர், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு அங்கீகாரமும், பரிசும் கிடைக்க இருக்கிறது. பத்திரப்பதிவுகள் நடைபெற வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் மஞ்சள் தானமாக கொடுக்கவும்.

ஆகஸ்ட் 17 அன்று பிறந்த பிரபலங்கள் : சச்சின், எஸ்.சங்கர், முகமது ஷா, நிதி அகர்வால், ஒய்.வேணுகோபால ரெட்டி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி