Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 ஆகஸ்ட் 2022) கோயிலில் மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 ஆகஸ்ட் 2022) கோயிலில் மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 23-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் தலைமைத்துவம் இன்று வெளிப்படும். இதனால் இன்று உங்களுக்கு புகழும், பெருமையும் வந்து சேரும். வேலையில் உயர் பதவியை கிடைக்க கூடும். நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் இருப்பதாக உணர்வீர்கள். உங்களது வாழ்க்கை துணை உங்களை பற்றி முழுமையாக புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பார். அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், வெகுமதிகள் அல்லது ஆதரவை பெற்று புன்னகையுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5

தானம் - கோயிலில் மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஊடக துறையினர், அரசியல்வாதிகள், வடிவமைப்பாளர், மருத்துவர்கள் மற்றும் நடிகர்கள் இன்று சிறப்பான வெற்றியை அனுபவிப்பார்கள். இன்றைக்கு குளிக்கும் போது தண்ணீரில் சிறிது பால் சேர்க்கவும். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி இன்றைய நாள் நகரும். மாணவர்கள் தங்கள் செயல்திறனில் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, அதிர்ஷ்டம் மற்றும் வசீகரத்தை அனுபவிப்பார்கள். தம்பதிகளின் உறவை காதல் பலப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு நேர்மறையாக இருக்கும் என்பதால் புதிய சலுகையை அல்லது புதிய மாற்றத்தை தயக்கமின்றி ஏற்று கொள்ளுங்கள். படைப்பாற்றல் மிக்கவர்கள் இன்று முதலீடு செய்ய ஏற்ற நாள். விளையாட்டு வீரர்கள், பங்கு தரகர்கள், விமான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஆசிரமங்களில் பிரௌன் சுகர் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று விலங்குகளுக்கு உதவுவது மற்றும் சேவை செய்வது சிறப்பான பலன்களை தரும். நிலையான திட்டங்களை செயல்படுத்த இன்று சுமுகமான நாள். இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பாக, பிசியாக இருப்பது போல தோன்றினாலும், மாலை நேரம் உங்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதை, உறவுகளை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இன்று அசைவம் அல்லது மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு உடை மற்றும் உணவை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் அதிர்ஷ்டம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஆகிய இரண்டையும் ஒன்றாக அனுபவிப்பீர்கள். ஷாப்பிங் செய்ய, ரிஸ்க் எடுக்க, ஷேர்களை வாங்க, போட்டிகளில் பங்கேற்க நல்ல நாள். பெரிய விஷயமாக இருந்தாலும் சரி சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் விரும்புவதை தாராளமாக வாங்கலாம். இன்று உங்கள் வாழ்வில் ஒரு சிறப்பு நண்பர் அல்லது வழிகாட்டியை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் சகாக்கள் மீது குருட்டு நம்பிக்கை வைக்க வேண்டாம். இன்று உங்களது அனைத்து இலக்குகளையும் அடைந்து நீங்கள் ஒரு சாம்பியன் என்ற அடையாளத்தை உருவாக்குவீர்கள். அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள், தரகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டல் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் களத்தில் இலக்குகளை எட்டி வெற்றியை தக்கவைக்க வேண்டும். நீங்கள் திருமண திட்டங்களை எதிர்பார்த்திருந்தால் அது இன்று நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2

தானம் - குழந்தைகளுக்கு நீல பென்சில் அல்லது பேனாவை தானமாக வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்கறிஞர்கள் மற்றும் மென்பொருள் பணியாளர்கள் இன்று வீட்டிலிருந்து வேலை செய்வதை தவிர்க்கவும். ஆவணங்கள் மற்றும் சட்ட வழக்குகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று உங்களிடமிருந்து காணாமல் போகும் விஷயமாக நம்பிக்கை இருக்கும், எனவே உடன் வேலை செய்பவவர்களுடன் உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - யாருக்கேனும் தாமிரத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

யாரும் சரியானவர்கள் இல்லை என மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். கடந்த காலத்தில் உங்களிடம் இருந்த தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இன்று எந்த கஷ்டத்திலும் இருந்து வெளிவர உங்களுக்கு உதவும். மருத்துவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், நாடக கலைஞர்கள், மருந்தாளுனர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இன்று பண பலன்களைப் பெறுவார்கள். சிறிய மன அழுத்தம் காரணமாக உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆதரவற்றோர் இல்லத்திற்கு கடுகு எண்ணெய் தானமாக கொடுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களுக்கு உதவி செய்யும் முன் உங்கள் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். நடிகர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள் அல்லது மருத்துவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பெயர், புகழ், அதிர்ஷ்டம் இன்று கிடைக்கும்.எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் பங்குகள் மற்றும் நிலங்களில் வணிக முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நாள். இன்று வலது கை மணிக்கட்டில் சிவப்பு கயிறு கட்டி கொள்வது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க செய்யும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - ஒரு பெண் குழந்தைக்கு சிவப்பு கைக்குட்டையை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 23-ல் பிறந்த பிரபலங்கள்: கேகே (பாடகர்), சாய்ரா பானோ, வாணி கபூர், கௌஹர் கான், பூபேஷ் பந்தேல், ஷிவ் கெர்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி