Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு இனிப்புகளை தானமாக வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு இனிப்புகளை தானமாக வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 31-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு சொத்து விற்பனை மிக சுமூகமாக நடைபெறும். கவுன்சிலிங், தங்க விற்பனை, டிராவல் ஏஜென்ஸி, பர்னிச்சர், புத்தகங்கள், மருந்து விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். அரசியல் கட்சியினருக்கு நல்ல பலன் தரக் கூடிய தலைமைத்துவம் கிடைக்கும். குழந்தைகள் ஆசிரியர்களிடம் பாராட்டு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்கள், சக பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப அரசியலை தவிர்க்கவும். உங்கள் கனவுகளையும், உணர்வுகளையும் ஒடுக்குவதற்கு சிலர் முயற்சி செய்வார்கள். உங்களை அவமதிக்கக் கூடிய ஒருவரை சந்திக்க நேரிடலாம். ஆகவே, எச்சரிக்கையுடன் இருக்கவும். ஏற்றமதி, இறக்குமதி தொழில்களில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் இரண்டு தேங்காய்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு இருக்கும் சமூக தொடர்புகள் மற்றும் கவர்ச்சிகரமான பெர்சனாலிட்டி ஆகியவை பிறருக்கு உங்கள் மீது பொறாமையை ஏற்படுத்தக் கூடும். அரசியல் தளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நாளாகும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சின் மூலமாக பிறரது கவனத்தை ஈர்ப்பீர்கள். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை திறந்த மனதுடன் வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் வயலெட்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 2

தானம் - ஆசிரமங்களில் ஆரஞ்சப் பழங்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்கு அது நல்ல மாற்றத்தை தரும். ஆகவே, உங்கள் முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளாதீர்கள். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்து வாங்கலாம். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்கள் பயணம் செய்ய சிறப்பான நாளாகும். சைவ உணவு மற்றும் தியானத்தை கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழம் கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தனி வாழ்க்கையில் காதல் உணர்வுகள் மற்றும் பந்தங்கள் ஏற்பட இருக்கின்றன. உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பலன்கள் கிடைக்க இருக்கிறது. பழைய நண்பர் அல்லது உறவினர் உங்கள் உதவியை தேடி வரக் கூடும். விற்பனை பிரிவில் உள்ளவர்கள் மிக வேகமான தொழில் வளர்ச்சியை காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை நிற காய்கறிகளை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மிகச் சிறப்பான நாளாகும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடலாம். பயணங்களை தவிர்க்கவும். புதிய வீடு அல்லது புதிய வேலை தேடும் நபர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு அமையும். நடிகர்கள் மற்றும் மீடியா துறையினருக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகளை தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தனிப்பட்ட உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நீடித்திருக்கும். ஆகவே நேரத்தை வீணடிக்க வேண்டாம். புதிய வாய்ப்புகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தடகளப் போட்டிகள் மற்றும் கல்வியில் வெற்றி பெறுவதற்கு மூத்தவர்களின் ஆதரவு மற்றும் ஆசிகளைப் பெறவும். எதிர் பாலினத்தவர்கள் மூலமாக அதிர்ஷ்டம் கை கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைக்க இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தாராள மனப்பான்மையுடன் செயல்படவும். உங்களின் நல்லெண்ணம் மற்றும் உங்களுக்கு இருக்கும் சமூக தொடர்புகள் ஆகியவை மூலமாக வெற்றி கிடைக்க இருக்கிறது. அறிவை தேடி நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்கள் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு பழைய நண்பர்களை சந்தித்து பழைய நிகழ்வுகள் மற்றும் பிணைப்புகள் குறித்து நினைவூட்டிக் கொள்வீர்கள். காதல் செய்பவர்கள் தூதுவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நடிகர்கள், ஆடிட்டர், ஆசிரியர்கள் போன்றோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - வீட்டுப் பணிப் பெண்ணுக்கு சிவப்பு நிற வளையல்களை தானமாக கொடுக்கவும்.

ஆகஸ்ட் 31 அன்று பிறந்த பிரபலங்கள் : ஜஹாங்கீர், சங்கர் ராஜா, அம்ரிதா ப்ரிதம், ரொடுபர்னோ கோஷ், ஜவகல் ஸ்ரீநாத்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி