Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 ஆகஸ்ட் 2022) ஆசிரமங்களில் இனிப்பு தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 ஆகஸ்ட் 2022) ஆசிரமங்களில் இனிப்பு தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 16-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சொத்து தொடர்பான முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும். சட்ட அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களைத் தீர்க்க உதவும் படி கேட்கும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். நாளின் ஈர்ப்பை அதிகரிக்க தோல் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு ஒரு சிக்கலான நாளாக இருக்கலாம். ஆவணங்கள் கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இன்று இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை புறக்கணித்து, தொழில் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். பிறரிடம் எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஆசிரமங்களில் இனிப்பு தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் ஆன்மீகம் மற்றும் தியானத்தில் ஈடுபடுவது உங்களுக்கு வளர்ச்சிக்கான பாதையை காட்டும் பொது பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். இசையமைப்பாளர்கள், டிசைனர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் கவனித்து கொள்ளுங்கள். பச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்றவற்றில் இருப்போர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் முதலாளி அல்லது சீனியரிடம் இன்று நீங்கள் பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு இன்று சிறந்த பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை பயன்படுத்துங்கள். உங்கள் காதலை முன்மொழிய இன்று சிறந்த நாள் ஏனெனில் வாழ்க்கை இன்று நீங்கள் விரும்பும் பரிசுகளை வழங்குகிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு வெள்ளை மாவை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் கஷ்டத்திற்கான காரணத்தை அறிந்து அதை சரி செய்வது அவசியம். இன்று உங்கள் வணிகம் மற்றும் வேலை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் ஆனால் தனிப்பட்ட பிரச்சனைகள் இன்று மிகவும் சிக்கலானதாக இருக்கும். எனவே வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். ஹோட்டல் வியாபாரிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், மருத்துவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் கிரீம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பெண்களுக்கு வளையல்களை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வழக்கறிஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர் மற்றும் சிஏக்கள் ஆகியோருக்கு ஒரு சிறந்த நாள். இன்று தீங்கு விளைவிக்கும் சர்ச்சைகளை எதிர்கொள்வதை தவிர்க்கவும். நீதிமன்றங்கள், திரையரங்குகள், தொழில்நுட்பம், அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு நாணயத்தை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உஙக்ளுடைய தினசரி பணிகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதில் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய நேரம். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது இன்று அவசியம். தயவு செய்து இன்று லாங் டிரைவ்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம் மற்றும் பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புகழ் எப்போதும் உங்கள் வேலை மற்றும் ஆளுமையின் ஒரு பகுதியாகும், எனவே உங்கள் அழகை விரைவுபடுத்த பொதுவில் இருங்கள். ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் துறையை சேர்ந்தவர்கள் புதிய உச்சத்தை காண்பார்கள். நாளை சிவப்பு நிறத்துடன் துவக்குவது நல்ல பலன்களை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: சைஃப் அலி கான், அரவிந்த் கெஜ்ரிவால், டேவிட் தவான், ஆர் ஆர் பாட்டீல், மகேஷ் மஞ்ச்ரேக்கர், உபென் படேல்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி