Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 ஆகஸ்ட் 2022) ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 ஆகஸ்ட் 2022) ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 20-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எல்லா வகையான வெகுமதிகளையும் அனுபவிப்பீர்கள், புகழ் பெறுவீர்கள் மற்றும் இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பொறாமையை எதிர்கொள்ள நேரிடும். பிறரிடம் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி ஷேர் செய்யாதீர்கள்.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று ராஜதந்திரத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். நமது முதல் தெய்வம் தாய் என்பதால் நாளைத் தொடங்கும் முன் அவரது ஆசிகளைப் பெறுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். உறவுகளில் இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். தகராறுகளுக்கு வழிவகுக்கும் தொடர்புகளிடம் இன்று பேசுவதை தவிர்க்கவும். ஒப்பந்தம் அல்லது டெண்டர்களில் ஈடுபட இன்று சிறந்த நாள். மருத்துவ பொருட்கள், வைரம், ரப்பர், விளையாட்டு பொருட்கள், திரவங்கள், புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் இன்று வெற்றியை ருசிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - இன்று பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகள் குடிக்க பால் கொடுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களை சுற்றி இருப்போரிடமிருந்து வாழ்த்துகளை பெறுவீர்கள். கடந்தகால சச்சரவுகள் அனைத்தையும் மறந்துவிட்டு, நாளை சிறப்பாக கொண்டு செல்ல உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள். உங்கள் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை கழிக்க இன்று ஒரு சிறந்த நாள். கற்பித்தல் பணி, நடனம், சமையல், டிசைனிங், நடிப்பு அல்லது தணிக்கை துறையில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுக்கு தேவையானவற்றை கேட்டு நன்கொடை கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் நாளை விலங்குகளுக்குச் சேவை செய்வதன் மூலம் தொடங்குங்கள். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வணிக உத்திகளைச் செயல்படுத்த ஏற்ற நாள். தனிப்பட்ட உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மன அமைதிக்காக பசுமையான சூழலில் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பீஜ் மற்றும் கிரே
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பெரியவர்களுக்கு துளசி மாலை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் இன்று வெற்றி பெறும் நாளாக உங்களுக்கு அமையும். எனினும் இன்று உங்களின் சக ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே அறிமுகமானவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். மகிழ்ச்சியுடன் வெளியே செல்லும் நீங்கள் அதை விட மகிழ்ச்சியாக வீடு திரும்புவீர்கள். சொத்து சம்பந்தமாக இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை மற்றும் கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆதரவற்றோருக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கிடைக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து அதன் பின் ஏற்று கொள்ளுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்ல மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க சிறந்த நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். மாலை நேரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வியாபாரம் அல்லது வேலையில் இன்று ஏற்படும் தடைகளை நீக்க உங்களது பழைய தொடர்புகளை தொடர்பு கொள்ள வேண்டிய நாள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் வியாபாரத்தில் சிக்கல்களை குறைக்கும். பார்ட்னர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்த சமரசமும் செய்யாதீர்கள். திருமண திட்டங்கள் நிறைவேறும். விநாயகர் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது வெற்றியை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை மற்றும் கிரீம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் செம்பு அல்லது வெண்கல நாணயத்தை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் மற்றும் தொடர்புகளின் பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகளை இன்று தீர்ப்பீர்கள். நடைமுறைச் சிந்தனையும், மென்மையான பேச்சும் இன்று நீங்கள் வெற்றியை அடைவதற்கான திறவுகோலாக இருக்கும். இன்று நீங்கள் பிளான் செய்யும் பயணத் திட்டங்கள் சாதகமாக அமையும். கால்நடைகளுக்கு தொண்டு செய்வது இன்று அவசியம்உங்கள் குடும்ப உறவுகளின் சக்தி இன்று உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவைப்படுபவர்களுக்கு காலணிகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வாலட்டில் சிவப்பு நிற துணியை வைத்திருங்கள். இன்று சில பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தாலும் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்பிக்கையே இந்த நாளின் வெற்றிக்கான திறவுகோல். ஆவணங்களில் கையொப்பமிடுவது, ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள், அறுவை சிகிச்சை மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை தாமதமாகும். விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - கோவிலில் சிவப்பு துணியை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ராஜீவ் காந்தி, நாராயண மூர்த்தி, நிஜாம் ஆசப், முஃப்தல் சைபுதீன், ரந்தீப் ஹூடா, ஷ்ரின் பஃன்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி