Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (9 ஆகஸ்ட் 2022) கோவிலில் சந்தனம் தானமாக கொடுக்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (9 ஆகஸ்ட் 2022) கோவிலில் சந்தனம் தானமாக கொடுக்கவும்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 9-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்கள் பெயருக்கு நல்ல புகழ் கிடைக்கும். உங்கள் நடவடிக்கைகள் ஹோரோயிஸமாக தோன்றும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கும். போட்டிகளில் ஒரு போராளியைப் போல வெற்றி பெறுவீர்கள். புத்தாக்க சிந்தனையுடன் நீங்கள் பேசும் பேச்சு மற்றவர்களை கவரும். உங்கள் முடிவுகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - மாதுளம்பழம் தானமாக கொடுக்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சமூகப் பணிகள் மீது நீங்கள் காட்டும் அக்கறை காரணமாக நிறைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். நிறைய வாழ்த்துக்கள் கிடைக்க இருக்கிறது. இன்று குழப்பம் ஏற்படலாம். ஆகவே முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கண்களை மூடி மனம் சொல்வதை கவனமாக கேளுங்கள். பங்குச்சந்தை மற்றும் ஏற்றுமதி துறைகளில் முதலீடு செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் வெள்ளிக்காசு தானமாக வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரும் கூட்டத்தோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது அரசுத் துறைகளுடன் நல்ல கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளவும். உங்களுக்கான சிறப்பு வாய்ந்த வாய்ப்பு காத்திருக்கிறது. உங்கள் உழைப்புக்கான லாபத்தை அறுவடை செய்யும் நேரம் இது. அரசியல் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு மிகுந்த நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தனம் தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகம் மற்றும் குடும்பத்தில் நிலவும் வளம் காரணமாக நீண்ட காலத்திற்கு பிறகு திருப்தி ஏற்படும். வணிகத்தில் லாபம் மற்றும் வெற்றி ஆகிய இரண்டும் ஒருசேர கிடைக்க இருக்கிறது. தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி பணிகளை இலகுவாக முடிக்கலாம். வணிகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் தாமதமின்றி நிறைவடையும். இன்றைக்கு கீரை உணவுகள் சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பல பின்னணிகளைக் கொண்ட வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் உங்களுக்கு இருப்பதால் வழக்கத்தை விட கூடுதலான வெற்றி கிடைக்கும். முதலீடு செய்வதில் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும். நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பார்ட்னர் கொடுக்கும் மரியாதையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு சிவப்பு அரிசி தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய பொறுப்புகள் மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால், கடும் முயற்சிகள் மூலமாக அனைத்தும் நிறைவு செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைக்கக் கூடிய நாள் ஆகும். வாழ்க்கைத்துணை உடனான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஷாப்பிங் அழைத்துச் செல்லுங்கள். காதல் உணர்வுகளால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பெண் பணியாளர்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆழ்மன சிந்தனைகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் சுற்றி இருப்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். எதையும் எடை போடும் உங்கள் திறன் வெற்றியை தரும் என்பதால் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பணியிடத்தில் எதிர்பாலினத்தவர் கொடுக்கும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வழக்கறிஞர்கள், ஆடிட்டர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

தானம் - சிறுதுண்டு தாமிர உலோகத்தை தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டுப் பணியாளர்களிடம் நீங்கள் பொறுமை இழக்க வாய்ப்பு உண்டு. அது எதிர்மறையான விளைவுகளை தரும் என்பதால் கட்டுபாட்டுடன் இருக்கவும். உங்கள் அதிகாரம் மற்றும் லாபம் ஆகிய இரண்டும் இன்றைக்கு கிடைக்கும். சொத்து ரீதியான முடிவுகள் சாதகமாக அமையும் என்றாலும், சட்ட வழக்குகளை தீர்க்க பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவையுள்ளவர்களுக்கு ஆடைகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு சாதகமான நேரம் கூடி வருவதால் வணிகத்தில் இன்றைக்கு ரிஸ்க் எடுக்கலாம். இன்றைக்கு நிறைவான புகழ் கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னோடியாக இருப்பதால் தலைமை பண்பை அனுபவிக்க முடியும். காதல் செய்பவர்கள் அதை வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாள் ஆகும். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள் இன்று உச்சம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

ஆகஸ்ட் 9 அன்று பிறந்த பிரபலங்கள் : ஹன்சிகா மோத்வானி, மகேஷ் பாபு, பிரிதம் மோடல், கிஷோர் பியானி, சவன் குமார் தக்.
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி