முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 ஜூலை 2022) கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 ஜூலை 2022) கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 27-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • 3-MIN READ
  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பெரும்பாலான பணிகளை சுமுகமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு மற்றவர்கள் மீது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். தம்பதிகள் செழிப்பாக இருக்க, காதல் உறவுகளை அனுபவிக்க சிறந்த நாள். நடன கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் தங்களது துறையில் பெரும் புகழ் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களின் விமர்சனங்களை நீங்கள் இன்று புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள். உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம்செலவிடுவது, குடும்ப விழாக்களில் கலந்துகொள்வது, சிறிய பயணத்தைத் திட்டமிடுவது, பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் உங்கள் துணைக்கு ஆச்சரியமான பரிசை வழங்குவதற்கு ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு வேலை அழுத்தம் இருந்தாலும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள். ஆன்மீகம் மற்றும் அறிவை அதிகரிக்க இன்று செயல்படுவீர்கள். குறிப்பாக பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மிகவும் சிறந்த நாள். ஆடைகள், நகைகள், புத்தகங்கள், அலங்காரம், தானியங்கள் வாங்க நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிக சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு சாதகமான நாள். நிதி தொடர்பான முக்கிய முடிவுகள் இன்று எடுக்க நினைத்தால் தாமதங்களை சந்திக்க நேரிடும். கட்டுமானப் பொருட்கள், உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் வணிகத்தில் இன்று புதிய சலுகையை எதிர்பார்க்கலாம். நிலையான ஆரோக்கியத்தை பராமரிக்க பச்சை இலை காய்கறி உணவுகளை சாப்பிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - உங்களது நெருங்கிய நண்பருக்கு மணி பிளான்ட் நன்கொடையாக கொடுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் பழகுவதை தவிர்த்து மற்றவர்களை நம்ப தொடங்குங்கள். உங்களது நீண்ட காலப் பிரச்சினைகளை தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி முதலீட்டில் லாபம் கிடைக்கும். பங்கு சந்தை, விளையாட்டு, நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் இன்று அதிர்ஷ்டம் பங்கு வகிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - விலங்குகள் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி, கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைக்கு மகிழ்ச்சியையும், முழுமையையும் தரும் ஒரு நல்ல நாளாக இருக்கும். இரவு உணவு அல்லது ஷாப்பிங்கிற்கு வெளியே செல்வீர்கள். விளையாட்டு வீரர், தோல் மருத்துவர்கள் பாடகர்கள், டிசைனர்கள், சமையல் கலைஞர்கள், மாணவர்கள் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ளும் வகையில் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - வயலட்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோயிலில் வெள்ளி நாணயம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முக்கிய தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் பெற்றோரின் சம்மதத்தை இன்று நீங்கள் பெற வேண்டும். உங்களால் சவால்களை சமாளித்து வெற்றி பெற முடியும் என்பதால் வழங்கப்படும் சவாலை ஏற்று கொள்ளுங்கள். குறிப்பாக மூத்தவர்களின் ஆலோசனைகளை கவனமாக கேளுங்கள். உங்களை கீழே தள்ள முயற்சிப்பவரின் முயற்சி தோல்வியில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

தானம் - தேவைப்படுவோருக்கு சிறிய காப்பர் மெட்டல் பீஸ்களை வாங்கி கொடுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரிய நிறுவனங்களுடனான உங்கள் தொடர்பு எதிர்காலத்தில் சிறந்த வருமானத்தை தரும் என்றாலும் நிகழ்காலம் சற்று கடினமாக உள்ளது, எனவே பொறுமையாக இருங்கள். சொத்து மற்றும் இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டாளிகளுடன் நேரில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவைப்படுபவர்களுக்கு குடை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அவமானத்தை சந்திக்க நேரிடும் என்பதால் நீங்கள் கூட்டத்திலிருந்து விலகியே இருங்கள். காதலில் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு அருமையான நாள். மாணவர்கள் முன்னேற்றம் அடைய இந்த நாளை பயன்படுத்த கடினமாக உழைக்க வேண்டும். பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் சிறந்த நாளாக இன்றைய தினத்தை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு மசூர் பருப்பு தானம் செய்யுங்கள்

ஜூலை 27ம் தேதி பிறந்த பிரபலங்கள்: ராகுல் போஸ், கிருத்தி சனோன், கே.எஸ்.சித்ரா, உத்தவ் தாக்கரே, விஷ்வ மோகன் பட்

First published:

Tags: Numerology