Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (18 ஆகஸ்ட் 2022) தேவையானவர்களுக்கு உப்பு தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (18 ஆகஸ்ட் 2022) தேவையானவர்களுக்கு உப்பு தானம் செய்யவும்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 18-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சமையலறையில், கேஸ் அடுப்பின் மேல் சூரிய பகவானின் படத்தை ஒட்டி வைக்கவும். இன்று உங்களின் எல்லா எண்ணங்களையும் செயல்களாக மாற்றுங்கள், ஏனென்றால் உங்களுக்கு கனவு நனவாகும் நாள் இது. உங்கள் திறன்களை, சாதுர்யத்தை, வெளிப்படுத்த வேண்டும், தலைமை தாங்க வேண்டும், பெரிய கூட்டத்தில் பேச வேண்டும். ஒரு போர்வீரனைப் போல போட்டியை வெல்ல முடியும். நீங்கள் கூட்டத்திற்குச் சென்று மைக்கைப் பிடிக்க வேண்டும். உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு, மற்றவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கிளாமர் துறையில் பெரும் புகழ் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
தானம்: குழந்தைகளுக்கு ஆரஞ்சு பேனாவை தானமாக வழங்குங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் பணியிடத்தில், நகரக்கூடிய ஒரு கலைப்பொருளை வைத்துக் கொள்ளவும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் காணாமல் போகும். மாற்றி மாற்றி பேசுவது உங்களுக்கு அழகு அல்ல. உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். ஆலோசனை நிறுவனங்கள் இன்று சிறப்பான சாதனைகளை அனுபவிப்பீர்கள். பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வணிக ஒப்பந்தங்களுக்குச் செல்லுங்கள். உறவுகளில் காதல் வளரும், இடையில் நீங்கள் மற்றவர்களின் பேசுவதை எல்லாம் கேட்காமல் இருந்தால் மட்டுமே செழிப்பை அடையும்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பயணத்துக்கு தயாராகுங்கள். நீங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர் என்றால்,புகழும் பெயரும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். நல்ல லாபம் பெறுவதற்கான நேரம் இது. உங்கள் திட்டங்கள் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சாதகமான நாள். வடிவமைப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், அறிவிப்பாளர்கள், பயிற்சியாளர்கள், நிதி ஆலோசகர்கள், மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இந்த நாளை மஞ்சள் அரிசி சாதம் சாப்பிட்டு தொடங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
நன்கொடைகள்: கோவிலில் சந்தனம் வழங்கவும்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பக்கம் மாறும். வேலையில், தொழிலில் புதிய தொடக்கம் ஏற்படும். வணிக ஒப்பந்தங்கள் தாமதமின்றி முடியும். நிதி ரீதியான முக்கிய முடிவுகள் அதிக லாபம் தரும். நாடகக் கலைஞர்கள் அல்லது நடிகர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஆகியோருக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும். உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் பெரிய லாபம் பெறுவார்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரைகள் மற்றும் பச்சை காய்கறி உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: கோவிலில் உலோகத்தை தானமாக வழங்கவும்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் அதிகபட்ச லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால், சோம்பேறித்தனத்தைக் கைவிட வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் அன்பையும் மரியாதையையும் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பங்குச் சந்தை, விளையாட்டு, நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடைகள்: செல்லப்பிராணிகளுக்கு திரவங்களை வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி பூஜை செய்து நாளைத் தொடங்கவும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும், நல்ல புரிதல் ஏற்படும். நகை, சில்லறை, துணி வியாபாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் இருப்பார்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைக்கு செழிப்பாகவும், முழுமையாகவும் மாறும். டிசைனர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்களுக்கு முன்னேற்றமான பாதை அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: வெள்ளை அரிசியை யாசகர்களுக்கு தானமாக வழங்கவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் அம்மாவின் ஆசி பெற்று இந்த தினத்தைத் தொடங்குங்கள். உங்கள் பார்ட்னர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களை முழுமையாக நம்பலாம். உங்கள் அறிவால் எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வெல்ல முடியும் என்பதால் உங்களுக்கு வழங்கப்படும் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அம்மா, சகோதரி அல்லது மனைவியின் ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வழக்கறிஞர்கள், தியேட்டர் கலைஞர்கள், ஆடிட்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் ஆகியோருக்கு சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
நன்கொடைகள்: சிறிய செப்புத் தகடை தானம் செய்யவும்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும், எப்போதும் துன்புறுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள், விற்பனை ஊழியர்கள், ரியல் எஸ்டேட், ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பதவி உயர்வு பெறுவார்கள். சொத்து தொடர்பான முடிவுகள் சாதகமாக மாறும், இருந்தாலும் சட்டப் பிரச்சனைகள் தீர கால அவகாசம் எடுக்கும். மருத்துவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சாதனைகளால் பெருமை அடைவார்கள். வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தானியங்களை தானம் செய்வதும், சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதும் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் ஊதா
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: தேவையானவர்களுக்கு உப்பு சுவையுள்ள உணவை தானம் செய்யவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடவும். எதிர்காலத்துக்கான அதிர்ஷ்டம், பணம், லாபம், நிலைத்தன்மை, வசதி வாய்ப்புகள் என்று அனைத்துமே மொத்தமாக கிடைக்கும். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் புதிய உயரத்தை எட்டும். உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு சிறந்த நாள். கவர்ச்சி தொழில்துறை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் புகழைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் சிறப்பான வாய்ப்புகளை வழங்கலாம் என்பதால், பொது மக்கள் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு இன்று சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: குல்சார், நிர்மலா சீத்தாராமன், சந்தீப் பாடில், பாஜி ராவ், விஜயலட்சுமி பண்டிட், டலேர் மெஹந்தி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி