Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (5 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (5 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 5-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள், பங்குச்சந்தை எஜன்ட்டுகள் ஆகியோர்கள் இன்று ரிஸ்க் எடுக்கலாம். அதிர்ஷ்டம் இருப்பதால், வணிக ரீதியான கமிட்மென்ட்களை சட்டபூர்வமாக பூர்த்தி செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் நீங்கள் அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவையும் பெறுவீர்கள். அன்பானவர்களிடமிருந்து பரிசுகள், வெகுமதிகள் அல்லது ஆதரவைப் பெறுவதால் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
நன்கொடைகள்: பசுமை விதைகளை கோவிலுக்கு தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சிக்கல்களைத் தீர்க்கும் நாள், எனவே, இதன் மூலம் உங்களுக்கு சாதகமாக நடக்கலாம் அல்லது பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கலாம். இன்று தலைமை பொறுப்பை அனுபவிப்பார்கள். பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளைப் பற்றிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான சாதகமான நேரம் இது. அதீதமான காதல், தம்பதிகளின் உறவை பலப்படுத்தும். முக்கியமான சந்திப்புகள் அல்லது வேலைக்கான நேர்காணல்களில் வெள்ளை நிறம் அணிவது அதிக அதிர்ஷ்டத்தைத் தரும். எதிர்காலத்தில் உதவி செய்யக்கூடிய, பழைய நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
தானம்: ஏழைகளுக்கு உப்பு தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சோஷியல் நெட்வொர்க்கை பலப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் நாள். சிறந்த முடிவுகள் வேண்டுமென்றால், கடின உழைப்பும், அர்பணிப்பும் தேவைப்படும். உங்களின் கம்யூனிகேஷன் திறன்களை சரியாக பயன்படுத்தாவிட்டால், உறவு பாதிக்கப்படும். எனவே எப்போதும் அமைதியாக இருக்கக்கூடாது. கிரியேட்டிவ்வான நபர்களுக்கு முதலீடு செய்ய மற்றும் லாபம் பெறுவதற்கான சிறந்த நேரம் ஆகும். முயற்சியைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை செயல்படுத்தி வெற்றிகரமாக முடிக்கலாம். கல்வியாளர்கள், ஓட்டல்காரர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு மற்றும் நல்ல விளம்பரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
நன்கொடைகள்: கோவிலில் மஞ்சள் நிற அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குபவர்களுடன் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்திருங்கள், ராகு கிரகத்தின் நேர்மறையான தாக்கம் நன்மையைத் தரும். உத்திகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு அதன் பங்கை வழங்கும். இருப்பினும், இந்த நாள் மந்தமானதாகவும், உங்களுக்கு எந்த நோக்கமும் இல்லாமல் இருப்பது போல தோன்றினாலும், நீங்கள் வீட்டைப் புறக்கணித்துவிட்டு வேலை அல்லது வணிகம் செய்ய வெளியே செல்ல வேண்டும். தயவு செய்து அசைவ உணவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: ஏழைகளுக்கு உப்புச் சுவையில்ல சைவ உணவு தானமாக வழங்கவும்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உறவுகளுடன் விருப்பம் போல அனுபவிக்க இன்று சிறந்த நாள். சகல சுகபோகங்களுடனும் இன்று ஒரு சிறு பயணத்தை மேற்கொள்வீர்கள். நீங்கள் சிறப்பான நபரை சந்திப்பீர்கள். எப்படி இருந்தாலும், இன்று நீங்கள் விரும்புவதை வாங்குங்கள். பங்கு அல்லது சொத்தில் முதலீடு செய்ய ஏற்ற நாள். தொழிலில் உங்களுக்கு அன்பும் ஸ்திரத்தன்மையும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடைகள்: மரக்கன்றுகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முன்னெப்போதையும் விட, இன்று அதிக தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று பண ரீதியான நன்மைகள் மிகவும் அதிகமாக கிடைக்கும். அனைத்து இலக்குகளையும் அடைந்து, வெற்றியாளராக உங்கள் அடையாளத்தை உருவாக்குவீர்கள். போட்டிகளில் சொல்லி வைத்து ஜெயிப்பது போல வெற்றியைத் தக்கவைக்கும் விளையாட்டு வீரர் நீங்கள். இல்லத்தரசிகளுக்கு, அவர்கள் குடும்பத்தினர் அளித்த மரியாதை மற்றும் அன்புக்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களால் அனைவரும் ஈர்க்கப் படுவார்கள். முறையான ஒப்பந்தங்கள் எளிதாகக் கையாளப்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2
நன்கொடைகள்: நீல நிற பென்சில் அல்லது பேனாக்களை குழந்தைகளுக்கு வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களைச் சுற்றி இருக்கும் அன்பும் பாசமும் இன்று உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவும். மஞ்சள் நிற தானியங்களை தானம் செய்ய மறக்க வேண்டாம். ஒரு சிறிய பிராண்டுடன் உங்கள் முயற்சியைத் தொடங்கலாம். இன்று உங்கள் தணிக்கையாளர்களை சரியாக நம்ப முடியாது என்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகளை நிதி ரீதியாக ஆய்வு செய்யவேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடைகள்: செம்பு பாத்திரத்தை தானம் செய்யவும்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்டமும், நிலைத்தன்மையும் உங்களுக்கு வாழ்வில் உதவியாக இருக்கும் ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும். இன்று கஷ்டத்தில் இருந்து மீள உங்களுடைய தன்னம்பிக்கை துணையாக இருக்கும். கால்நடைகளுக்கு உதவி செய்யுங்கள். தம்பதிகளிடையே காதல் உறவு ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நல்ல பணம் சம்பாதிப்பார்கள். இயந்திரங்கள் வாங்கவும், சொத்துகளில் முதலீடு செய்யவும் இன்று சிறந்த நாள். மன அழுத்தம் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், எனவே தூங்குவதற்கு முன் யோகா பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: கால்நடைகளுக்கு தீவனம் வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொழில் முதலீடு செய்ய அல்லது வேலைக்கான நேர்காணல் செல்ல இன்று ஏற்ற நாள். இந்த நாள் இளைஞர்கள் தங்கள் பார்ட்னர்களைக் கவர சாதகமாக இருக்கும். இளைஞர்கள் தங்கள் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லோரிடமும் எளிமையாகப் பழகுதல், பேசுதல், நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, விருந்து நடத்துவது, நகைகளை வாங்குதல் அல்லது போட்டித் தேர்வு நடத்துதல் போன்றவற்றை அனுபவிக்க ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: பெண் குழந்தைக்கு சிவப்பு கைக்குட்டையை அளிக்கவும்

செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பங்கஜ் திரிபாதி, டாக்டர். ராதா கிருஷ்ணன், விது வினோத் சோப்ரா, யோகேந்திர யாதவ், பிரக்யான் ஓஜா, அயான் அலி கான்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி