Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு உப்பு தானமாக கொடுக்கவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு உப்பு தானமாக கொடுக்கவும்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 14-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அளவற்ற ஆற்றல் மற்றும் சூரிய பகவானின் ஆசிர்வாதங்கள் ஆகியவை உங்களுக்கு நம்பிக்கையை தரும். உங்கள் வசீகரம் எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாக இருப்பதால் நீங்கள் தலைவராக தொடர்ந்து நீடிப்பீர்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்ய அல்லது பணியில் உயர் பதவியை அடைய உங்களுக்கு நம்பிக்கை உண்டு. அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5
தானம் - கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் காதல் உறவில் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே கொஞ்சம் அமைதியாக இருங்கள். தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். குழந்தைகளிடம் தன்னிம்பிக்கை தென்பட்டாலும், முயற்சிகளுக்கான வெற்றி தாமதமாகும். கடல் பச்சை நிற உடைகளை அணிந்தால் மீட்டிங் அல்லது நேர்காணல்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும். வழக்கறிஞர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அய்வா
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு உப்பு தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சிறிய அளவு சர்க்கரை சாப்பிட்டு இன்றைய பொழுதை தொடங்கவும். தொழில்முறை வாழ்க்கையில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் வளர்ச்சி ஆகியவை கிடைக்க இருக்கிறது. இன்று நீங்கள் மனம் விட்டு பேசினால் புதிய உறவுகள் மலரும். ஆகவே வாய்ப்பை தவர விட வேண்டாம். புதிய வணிக வாய்ப்பு வெற்றிகரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - ஆசிரமங்களில் மஞ்சள் சாதம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் இறுக்கமான மனநிலையை உடைத்து, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. மார்க்கெட்டிங் உத்திகளை தொடர்ந்து செயல்படுத்துங்கள். அதன் மூலமாக அதிர்ஷ்டம் கிடைக்கும். இன்றைய நாள் குழப்பம் மிகுந்ததாகவும், இலக்கு அற்றதாகவும் இருந்தாலும் கூட மாலையில் வெற்றி கிடைக்கும். இளையவர்கள் காதலை வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - சிட்ரஸ் உணவுகளை ஏழைகளுக்கு கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலக மேஜையின் மீது கிறிஸ்டல் தாமரையை வைக்கவும். உங்கள் இலக்கை அடைவதற்கான நல்ல நேரம் உங்களை நெருங்கி வருகிறது. இன்று ஷாப்பிங் செய்ய, ரிஸ்க் எடுக்க, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய, விளையாட்டுகளில் பங்கேற்க சிறப்பான நாள் ஆகும். இன்று உங்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - பச்சை நிற தாவரங்களை தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உணர்வுகளை மெய்ப்பிக்கும் தருணம் இது. திருமண வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். தம்பதியர்கள் இடையே பலமான பந்தம் உண்டாகும். இன்று அனைத்து இலக்குகளையும் அடையலாம். ஒரு வெற்றியாளராக உங்களை உணர முடியும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வரும். சொத்து விவகாரங்களை எளிமையாக கையாளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2
தானம் - வீட்டு பணியாளருக்கு அழகு சாதனப் பொருட்கள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கொஞ்சம் வெந்தய விதைகளை சாப்பிட்டு வரவும். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் பக்குவம் முக்கியத்துவம் பெறும். உங்களைச் சுற்றியுள்ள அன்பு மற்றும் அரவணைப்பு ஆகியவை மகிழ்ச்சியை தரும். மூத்தவர்களின் ஆசிர்வாதங்களை பெறவும். சக நண்பர்களின் மீது நம்பிக்கை வைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - காப்பர் பாத்திரம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆற்றல் மற்றும் திறமை ஆகியவை எல்லையில்லாதவை என்பதால் உங்களை பெரும் தலைவராக உருவாக்கும். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு என்பது இன்றைக்கு எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள உதவும். தம்பதியர்களுக்கு இடையிலான காதல் பந்தம் இனிமையாக இருக்கும். மன அழுத்தத்தைப் போக்குவதற்கு யோகா செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உடமைகள் மீது எப்போதும் கவனம் செலுத்துங்கள். ஏற்கனவே தெரிந்த நபர் மூலமாக உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படலாம். பங்குச் சந்தை தவிர்த்த பிற வணிகங்களில் முதலீடு செய்வதற்கு சிறப்பான நாள் ஆகும். இளம் வயதினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஈர்ப்பதற்கான தருணம் இது. நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு சுமாரான நாள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - பெண் குழந்தைகளுக்கு சிவப்பு நிற கைக்குட்டைகள் வழங்கவும்.

ஆகஸ்ட் 14 அன்று பிறந்த பிரபலங்கள் : குல்தீப் நாயர், ஜானி லீவர், தினா வாடியா, சுனிதி சௌஹா, மோஹித் ராய்னா, ஆசம் கான்
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி