ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 அக்டோபர் 2022) ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (31 அக்டோபர் 2022) ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அக்டோபர் 31-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தன்னம்பிக்கையுடன் உங்களை வளர்த்துக் கொள்வதற்கான நாளாக இன்றைய நாள் அமையக்கூடும். எந்தவிதப் பலனையும் கருத்தில் கொள்ளாமல் உழைப்பை மட்டும் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு எதிராக ஒரு இயக்கம் செயல்பட்டுவருகிறது என்பதால் எந்த வேலை செய்தாலும் நிதானம் தேவை. சொத்து வாங்குவதில் சிக்கல் ஏற்படும். புத்தகங்கள், இயந்திரக் கருவிகள், ஆடைகள் போன்ற பலவற்றை வாங்க நினைத்தாலும் வருமானத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களைப் பொருத்தமட்டில் முன்னேறுவதற்கானப் புதிய வழிகளைப் பற்றி ஆராய்வார்கள். மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் – கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள் – ஞாயிறு

அதிர்ஷ்ட எண் – 1

பரிகாரம் - பிச்சைக்காரர்களுக்கு கோதுமை தானம் செய்யவும்.

எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் சிறப்பாக அமைய சந்திர பகவானுக்குரிய சடங்குகளைச் செய்யுங்கள். உள்நாட்டு அரசியலைத் தவிர்ப்பதோடு பெண்கள் மற்ற பெண்களுடன் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் உங்களது உணர்வுகளையும், லட்சியங்களையும் அடக்க முயற்சிப்பார்கள். சட்டப்பூர்வ கடமைகள் நிறைவேறும். அரசாங்க ஒப்பந்தங்களை முறியடிக்க உங்களின் கடந்த கால உறவுகளைப் பயன்படுத்துவதற்கான நாள் இன்று. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான தொழில்களில் உயரத்தைக் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 6

பரிகாரம்: கோவில்களுக்கு இரண்டு தேங்காய்களைத் தானம் செய்யுங்கள்.

எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழப்பங்கள் மற்றும் சர்ச்சையில் இருந்து விலகி இருங்கள். உங்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு வெளியே செல்ல வேண்டும். உங்களின் திறமையை ஒரே திசையில் மாற்றி வெற்றியைக் கொண்டாடுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளால் வெற்றியைக் காண்பீர்கள். அரசு அதிகாரிகள் சுற்றுப்புறத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன்னதாக தினமும் நெற்றியில் சந்தனம் இட மறந்துவிடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

பரிகாரம்: ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்.

எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்தில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முடிவுகளைத் தெளிவாக எடுக்க வேண்டும். அடிக்கடி கருத்துகளை மாறி மாறி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அரசியல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய சாதகமான நாள். மருத்துவம், மென் பொருள், கைவினைப் பொருள்கள், விஞ்ஞானிகள், விளம்பரத்துறையினர் வாழ்க்கையில் வெற்றிக்கரமான மாற்றங்களைக் காண்பீர்கள். மாணவர்கள் இலக்கை அடையக்கூடும். சைவ உணவு மற்றும் தியானத்தைப் பின்பற்றவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 9

பரிகாரம்: பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்வது அவசியம்

எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய நிதி நிர்வாகத்தில் வேலை செய்ய வேண்டும். தொடக்கத்தில் பணி மெதுவாக செய்தாலும் இரண்டாவது பாதியில் வெற்றியைக் காண்பீர்கள். வடிவமைப்பாளர்கள், தரகர்கள், சொத்து வியாபாரிகள், வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிப்பீர்கள். மாணவர்களுக்கு சிறந்த நாளாக அமையும். குறிப்பாக அகாடமியில் சிறந்த மதிப்பெண்களை நீங்கள் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

பரிகாரம்: அனாதை இல்லத்தில் பால் தானம் செய்ய வேண்டும்

எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்களது வாழ்க்கையில் சாதகமான சூழல் நிலவும். வீட்டு வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் சிறந்த நாளாக அமையக்கூடும். வெளிநாடு செல்வதற்கு விசாவுக்காக காத்திருக்கும் நிலை நீடிக்கும். முடிவுகளை நிதானமாக எடுக்க முயலுங்கள். உங்களது வாழ்க்கையில் உங்கள் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

பரிகாரம்: ஏழைகளுக்கு பால் இனிப்பு தானம்

எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது வாழ்க்கையில் புதிய சலுகைகள் பல கிடைக்கும் என்பதால் நேரத்தை வீணடிக்காமல் வேலையை திறம்பட செய்யுங்கள். வக்கீல்கள் மற்றும் சிஏ தொழிலில் உள்ளவர்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டு மற்றும் கல்வியில் உங்களின் வெற்றிக்கு பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அமைதியான உரையாடல் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும். பெண்கள் பங்குச்சந்தையில் அதிர்ஷ்டத்தை அனுவிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

பரிகாரம்: தயவு செய்து அனாதை இல்லத்திற்கு எழுதுப்பொருட்களை வழங்கவும்

எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது மனதை மகிழ்ச்சியாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்க சனி பகவான் மந்திரத்தை இன்று உச்சரிக்கவும். வாழ்க்கையில் சிறிது நேரம் ஓய்வு மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்களது வாழ்க்கையை நிம்மதியைக் கொடுக்கும். உங்களின் கடந்த கால உழைப்பினால் பண பலன்களை இன்று நீங்கள் பெறக்கூடும். இன்றைய நாளில் வெற்றியை நீங்கள் பெறக்கூடும். உங்களுடைய பேச்சுகள் மற்றவர்களைக் கவரக்கூடும். பாராட்டுகளையும் நீங்கள் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

பரிகாரம்: வீட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு துளசி செடியை நன்கொடையாக கொடுங்கள்

எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விளையாட்டு வீரர்கள் இன்று வெற்றியை அனுபவிக்கும் நாளாக அமையும். நீங்கள உங்களது பழைய நண்பர்களை சந்திக்க நேரிடுவதோடு பழைய நினைவுகளைப் பகிர்வதற்கான வாய்ப்பு அமையக்கூடும். வியாபாரிகள் மற்றும் மருத்துவர்கள் சிறப்பு அங்கீகாரத்தைப் பெறுவார்கள். காதலிப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பதவி உயர்வு, நேர்காணல் அல்லது ஆடிஷன்களில் வெற்றியைப் பெறுவதற்கான நல்ல நாள் இன்று. விளையாட்டு வீரர்களும், மாணவர்களுக்கும் சாதகற்ற சூழல் ஏற்படும். சில சமயங்களில் இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுவிக்கும் நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷட நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

பரிகாரம்: வீட்டு வேலைக்காரர் அல்லது பிச்சைக்காரர்களுக்கு மாதுளை தானம் செய்யுங்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Numerology