Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (4 ஆகஸ்ட் 2022) கோவிலில் எண்ணெய்யை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (4 ஆகஸ்ட் 2022) கோவிலில் எண்ணெய்யை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 4-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஒரு புதிய உறவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் வணிக கூட்டாண்மையைத் தொடங்க இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், நல்லபடியாகவும் வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். இயந்திரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவது இன்று அதிக லாபத்தை தரும். மருந்து, இயந்திரங்கள், உற்பத்தி, அழகுசாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் கட்டுமானம், விவசாயப் புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி ஆகிய வணிகங்கள் சிறப்பான செயல்திறனை பெறும். குழந்தைகள் தங்களது பயிற்சியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள். இன்று நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் பேச்சில் மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியது தான்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி மற்றும் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 6
தானம்: ஏழைகளுக்கு அரிசி அல்லது சர்க்கரையை தானம் செய்யுங்கள்

#எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிக சண்டை சச்சரவுகள் மற்றும் தகராறு கொண்ட நாளாக இருக்கலாம். முக்கியமான அல்லது ரகசியமான தகவல்களை உங்கள் முதலாளிக்கு மின்னஞ்சல் செய்ய விரும்பினால், அது குறித்து பயப்படாமல் முன்னேறிச் செல்லுங்கள். சட்டப்பூர்வ விஷயங்கள் தாமதமாக நடைபெறலாம். பழைய கடன்களைத் தீர்க்கவும், சட்டப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உங்கள் பணத்தைப் பயன்படுத்துவதற்கான நாள் இது. உலோகம், மருந்துகள், பொறியியல், ஏற்றுமதி இறக்குமதி, ரசாயனம், கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களைக் காண்பார்கள். இன்று உங்களின் மன நிம்மதியில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ மற்றும் பீச்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கோவிலில் தயிரை தானம் செய்யலாம்

#எண் 3: ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று நீங்கள் தனிப்பட்ட உறவுகளில் தெளிவை பெறுவீர்கள். அரசாங்க வேலை அல்லது ஒப்பந்தங்களின் பயணத்தைத் தொடங்க இது ஒரு சிறந்த நாள். அரசியல்வாதிகள் உங்களது திறமை, அறிவு, மற்றும் பேச்சாற்றல் மூலம் மக்களின் மனதில் இடம் பிடிக்க தொடங்குவீர்கள். பணியிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் குறிப்பாக அரசியல்வாதிகள், இசைக்கலைஞர்கள், மின்னணு ஊடகங்கள், ஆட்டோமொபைல் தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர்களுக்கு சாதகமாக மாறும். இன்று செய்யும் முதலீடுகள் அதிக லாபம் தரும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை திறந்த மனதுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசாங்க பணியில் உள்ளவர்கள் எல்லாவிதமான காரியங்களிலும் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உங்கள் குருவின் பெயரை உச்சரிக்க மறக்காதீர்கள். இன்று மஞ்சள் நிற ஆடைகளை அணிவது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
நன்கொடைகள்: பெண் உதவியாளருக்கு குங்குமப்பூவை தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிகாலையில் நீராடி சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது மூலம் இந்த நாளை தொடங்குங்கள். விவசாயம், உற்பத்தி, கைவினைப்பொருட்கள், பயிற்சி, விளையாட்டு பொருட்கள், வங்கி ஆகியவற்றில் உள்ளவர்கள் அதிக லாபத்தை சம்பாதிக்க இந்த நாள் சிறந்தது. நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது ஒழுக்கம் மற்றும் முழுமை மட்டுமே. எதிர்காலத்திற்காக இன்று விதைப்பது உங்களுக்கு நல்ல பலனை தரும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பரபரப்பான நாளாக இருக்கும். மருத்துவம் மற்றும் விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் தங்களது கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். தயவு செய்து இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: பிச்சைக்காரர்களுக்கு பச்சை வாழைப்பழத்தை தானம் செய்யுங்கள்

#எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற விநாயகப் பெருமானின் கோவிலில் பச்சை தானியங்களை கொண்டு வழிபடுங்கள். கடின உழைப்பை புத்திசாலித்தனமாக செயல்படுத்துவதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெற வேண்டிய நாள் இன்று. உங்கள் சிறந்த ஆளுமை திறன் சுற்றியுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கும். உங்களின் செயல்திறனின் அங்கீகாரம் மற்றும் பலன்களை இன்று பெறுவீர்கள். விளையாட்டு வீரர், இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், பங்குதாரர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் சிறப்பு அதிர்ஷ்டத்தை இன்று பெற வாய்ப்புண்டு. விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கும் சாதகமான நாளாக இன்று இருக்கும். மாணவர்கள் இன்று தங்கள் கல்வியில் பல சாதனைகளை செய்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: கால்நடைகளுக்கு பச்சை இலைகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

அதிர்ஷ்டத்தின் சக்கரம் இந்த நாளை வாய்ப்புகள் மற்றும் லாபம் நிறைந்ததாக மாற்றும். இன்றைய நாள் பலருக்கு வளர்ச்சியை உருவாக்கும் நாளாக அமையும். பயணத்திற்குச் செல்ல, பொருட்களை வாங்க, விற்க, முக்கிய வேலைகளில் ஈடுபட, ஊடகங்களை எதிர்கொள்ள, வெற்றியைக் கொண்டாட இது ஒரு சிறந்த நாள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் புதிய வாய்ப்புகளை பெறவும் நீங்கள் இன்று முயற்சிக்கலாம். விசாவுக்காகக் காத்திருந்தால், நேர்மறையான முடிவுகள் இன்று எதிர்பார்க்கலாம். சொத்துக்களை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது. நடிகர்கள் மற்றும் ஊடகத்தினர் இன்று வெற்றியை பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: வீட்டு உதவியாளருக்கு பாத்திரங்களை தானமாக வழங்குங்கள்.

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மனதை நிதானமாக வைக்க இன்று தியானம் தவிர்க்க முடியாத ஒன்று. இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருந்தாலும், அதே நேரத்தில் சட்ட வழக்குகளில் நல்ல முடிவுகளும் கிடைக்கும். விளையாட்டு, சட்ட வழக்குகள், வணிக ஒப்பந்தங்கள், நேர்காணல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் உயர்வான வெற்றி இன்று சாத்தியமாகும். பெரியவர்கள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்று இந்த நாளை தொடங்குங்கள். குரு மந்திரத்தை வாசித்து இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகள் இன்று அனைத்து விளையாட்டிலும் வெற்றி பெற உதவும். நீங்கள் புகையிலை அல்லது மதுபானம் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. உடலை ஆரோக்கியமாக வைக்க காய்கறி சேர்த்த உணவுகளை சாப்பிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடைகள்: கோவிலில் எண்ணெய்யை தானம் செய்யுங்கள்

#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மன அமைதியை மேம்படுத்த உங்கள் வீடும் பணியிடமும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது எதிர்காலம் மற்றும் நிகழ்கால நிலையை பற்றி சிந்தியுங்கள். வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் பிராண்ட் மற்றும் நல்லெண்ணத்தின் உதவியுடன் நீங்கள் இதை அடையலாம். இந்த நாளின் முடிவில் உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். தொண்டு செய்யும் குணம் மற்றும் பேச்சில் மென்மை ஆகியவை இன்று லாபத்தை பெற்று தரும் வழிகளாக இருக்கும். இன்று மருத்துவர்கள் பலவித பாராட்டுகளைப் பெறுவார்கள். இன்று மாலைக்குள் பண பலன்களை அடைவீர்கள். தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் நேரத்தை செலவிடுங்கள். மேலும் காலையில் எழுந்தவுடன் உங்களின் காலை கடமைகளை சரியாக முடிக்க பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு பாதணிகளை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் மற்றும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடிய நாளாக இன்று அமையும். காதல் உணர்வு நிறைவான நாளை உங்களுக்கு தரும். உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க நண்பர்களுடன் துக்கங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புண்டு. விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் பாராட்டுகளை பெறுவார்கள். பொதுப் பேச்சாளர்கள், சமையல்காரர்கள், ஊடகவியலாளர்கள், நடிகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று பெரும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
நன்கொடைகள்: வீட்டு உதவியாளருக்கு சிவப்பு நிற வளையல்களை தானமாக வழங்குங்கள்

ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: அர்பாஸ் கான், கிஷோர் குமார், உதய்பூர் சிங், ஷஷி கலா, விஷால் பரத்வாஜ், ஸ்ருதி மெர்ச்சன்ட்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி