Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (25 ஆகஸ்ட் 2022) கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (25 ஆகஸ்ட் 2022) கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 25-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சாதகமாக இருக்கும், சிறப்பான பலன்களை தரும். நடிகர்கள் மற்றும் பொது பேச்சாளர்கள் வேலையில் வளர்ச்சியை எதிர்கொள்வார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், உலோக உற்பத்தியாளர்கள், நிதியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கிடைக்கும் புதிய சலுகைகளை ஏற்க வேண்டும். இன்று தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 7
தானம் - கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்கள் எந்த வடிவத்திலாவது இன்று குங்குமத்தை அணிய வேண்டும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி இருங்கள். உங்கள் உள்மனது சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. ஆனால் இன்று நீங்கள் பிடிவாதத்தை குறைத்து கொள்ள வேண்டும். இன்று அரசியல்வாதிகள், ஊடகங்கள், விவசாயிகள், வங்கியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆஃப் ஒயிட்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வயதில் மூத்தவர்களை எந்த வகையிலும் காயப்படுத்த கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வசீகரமும் ஈர்ப்பும் நாளை வெற்றியுடன் கொண்டு செல்லும். நண்பர்களுடன் இருக்கும் போது நிதி விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதை மனதில் வையுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் வயலட்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - தேவைப்படுபவர்களுக்கு பிரவுன் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அனைத்து முக்கிய முடிவுகளும் சரியான பலன்களை தரும் மற்றும் இன்று சிறப்பான முறையில் பணம் சம்பாதிக்கும் நாள். உங்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து பணிகளையும் சரியாக முடிப்பீர்கள். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களில் உள்ளவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு தானியங்கள் தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் அனைத்து இலக்குகளையும் இன்று எளிதாக மற்றும் வேகமாக அடைவீர்கள். உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம், வெகுமதிகள் பெறுவீர்கள். இன்று பணப் பலன்கள் பெறும் மற்றும் சொத்து முதலீடுகள் செய்யும் நாளாக இருக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை அணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் பீஜ்
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களின் நேர்மையை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். பல பணிகள் இருந்தாலும் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு அனைத்தையும் முடிப்பீர்கள். காதல் மற்றும் தியாக உணர்வு இன்று உங்கள் மனதை ஆளும். வீட்டு பொறுப்புகளை அதிகம் சுமக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோயிலில் வெள்ளி நாணயம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று டார்க் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். பெரியவர்கள் மற்றும் குருவின் ஆசிர்வாதத்தைப் பெற்றால் சிறந்த லாபத்தை அனுபவிக்கலாம். காதல் உறவுகள் அவநம்பிக்கையால் பாதிக்கப்படும். பார்ட்னர்ஷிப்பில் இல்லை என்றால் உங்கள் பிசினஸ் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள் மற்றும் வியாழன்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பிடிவாதத்தை விட்டு வரும் புதிய வாய்ப்பை ஏற்று கொள்வது சிறந்தது. ஊழியர்களிடம் மென்மையான பேச்சை பயன்படுத்த மறக்காதீர்கள். ஆன்மீக பாதையில் செல்ல மனம் அமைதி பெறும். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம் மற்றும் கிரீம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி மற்றும் வியாழன்
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் அதிகாரம், பணம், அங்கீகாரம், ஆடம்பரம் மற்றும் புகழ் என சகலத்தையும் அனுபவிக்க ஏற்ற நாள். நடிப்பு, ஊடகம், ஆங்கரிங், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் துறையை சேர்ந்தவர்கள் இன்று புதிய உயரங்களைக் காண்பார்கள். இன்றைய நாளை பாசிட்டிவாக தொடங்க மாதுளை சாப்பிடலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற தானியங்களை தானம் செய்யுங்கள்

ஆகஸ்ட் 25-ல் பிறந்த பிரபலங்கள்: விஜயகாந்த், ராஜீவ் கபூர், விஜயேதா பண்டிட், வினேஷ் போகட், ஷிவ் தயாள் சிங், வீர்சந்திர காந்தி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி