Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (21 ஜூன் 2022) கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (21 ஜூன் 2022) கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 21 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணி அனுபவத்தை விட, உங்கள் கடந்தகால தகுதி மற்றும் பயிற்சி ஆகியவை உங்களின் இன்றைய நேர்காணலுக்கு பெரிதும் உதவும். மேலும் தேர்வில் வெற்றிபெற இது பயனுள்ளதாக இருக்கும். இன்று சொத்தை விற்று பணம் சம்பாதிப்பதற்கு ஒரு சிறந்த நாள். விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. வீட்டு அலங்காரம், பள்ளி, எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் நிதி வணிகம் இன்று சீராக இருக்கும். இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் முக்கியமானவற்றை விற்று முடிக்க வேண்டும். உங்களின் நண்பர்கள் இன்று உங்களுக்கு துணையாக இருக்க மாட்டார்கள். எனவே, உங்களுக்கான விஷயங்களை நீங்களே செய்ய பாருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
தானம்: பிச்சைக்காரர்களுக்கு பழுப்பு அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அழகான நாளாக அமையும். இன்று நீங்கள் மக்களின் பாராட்டு மற்றும் அன்பை பெறுவீர்கள். சட்டப்பூர்வ கடமைகள் சுமூகமாக நிறைவேறும். இன்று உங்கள் அப்பாவித்தனத்தை யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம், எனவே கவனமாக இருங்கள். பெண்கள் பொது மேடைகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைய வாய்ப்புகள் உண்டு. ஏற்றுமதி - இறக்குமதி தொழில் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களை இன்று அடைவார்கள். வெற்றிக்கான வாய்ப்புகளை தட்டி பறிக்க வேண்டிய நேரம் இது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: கோவிலில் பால் அல்லது எண்ணெயை தானம் செய்யுங்கள்.

#எண் 3: ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

உங்கள் நண்பர்கள் உங்களிடம் பொறாமை கொள்ள கூடும் மற்றும் எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் உங்களுக்கு பாதிப்புகளை உண்டாக்க கூடும். எனவே இன்று கவனமாக இருங்கள் மற்றும் அவர்களுடன் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். அவர்களின் செயல்களை பொறுத்து உங்கள் நாள் இன்று வெற்றிகரமாக இருக்கும். மன அழுத்தத்தை போக்க, மாலையில் நல்ல வெந்நீர் குளியல் எடுப்பதே சிறந்த தீர்வாகும்.
பணியிடத்தில் பதவி உயர்வு உங்களை தேடி வரும். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக கல்வியாளர், இசைக்கலைஞர்கள், வங்கியாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் ஆகியோர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக மாறும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை திறந்த மனதுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் எல்லாவிதமான காரியங்களிலும் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். உங்கள் நாளைத் தொடங்கும் முன் உங்கள் குருவின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் இட்டு கொள்ள மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3
தானம்: குழந்தைகளுக்கு மஞ்சள் பேனா அல்லது பென்சிலை தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் செய்கின்ற வேலையை சாமர்த்தியமாக செய்து முடிப்பதால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. மேலும் வெற்றிக்கான இந்த பயணத்தில் உங்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை, எதிர்காலத்திற்கான விதையை இன்று விதைக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். குறிப்பாக விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு இன்று பயணம் செய்ய சிறந்த நாள். கட்டுமானம், பங்குச் சந்தை வணிகம் ஓரளவு நன்றாக செயல்படும். ஆனால் ஊடகம், உலோகம், மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் மற்றும் மார்க்கெட்டிங் செய்பவர்கள் தங்கள் மாத இறுதி இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. தயவு செய்து இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்போது தான் நன்மைகள் உங்களை தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: பிச்சைக்காரர்களுக்கு ஆடையை தானம் செய்வது அவசியம்

#எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணி விவரம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று ஒரு துவக்கம் இருக்க வேண்டும். திருமணமானவர்கள் சிறந்த குடும்ப பயன்களை பெறுவார்கள். தனிமையில் இருப்பவர்கள் தங்கள் அன்பானவர்களை கண்டறிய இது ஒரு சிறந்த நாள். இன்று உங்களின் பழைய நண்பர் அல்லது உறவினர் ஒருவரை சந்தித்து அவரின் உதவியை பெறுவீர்கள். மேலும் உங்களின் ஆதரவையும் நீங்கள் வழங்க வேண்டும். வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிறப்பு அதிர்ஷ்டத்தை பெற வாய்ப்பு உண்டு. விற்பனையில் உள்ளவர்களுக்கும் குறிப்பாக விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கும் வேகமான வளர்ச்சி கிடைக்கும். மாணவர்கள் இன்று தங்கள் படிப்பில் சாதனைகளை அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6:(நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்களின் செயல்திறன் மற்றும் ஆளுமையை இன்று உலகமே கொண்டாடும். உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்ளவும், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், காதல் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பயணத்திற்கு செல்லவும், திறமைகளை பிரதிநிதித்துவப்படுத்தவும், விளக்கங்களை வழங்கவும், வெகுஜன ஊடகங்களை எதிர்கொள்ளவும், வெற்றியை கொண்டாடவும் இன்று மிக சிறந்த நாள். குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிட சரியான நாள். விசாவுக்காகக் காத்திருப்பவர்களுக்கு இன்று நல்ல செய்தி வரக்கூடும். புதிய தொழிற்சாலை அமைக்க சொத்து தேடுபவர்களுக்கு இன்று நல்ல முடிவு கிடைக்கும். நடிகர்கள் மற்றும் ஊடகத்தில் வேளை செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்யுங்கள்.

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெற்றி உங்கள் கைகளில் தான் உள்ளது, நீங்கள் இன்று சிறிது ஆளுமை திறனுடன் செயல்பட்டால் ஹீரோவாக புகழ் அடைவீர்கள். இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். சட்ட வழக்குகளில் உங்கள் ஞானமும் பகுப்பாய்வும் மிக அவசியம். உங்கள் பிரகாசமான வாழ்வும் அதற்கான வெற்றியும் இன்று சாத்தியமாகும். காதல் உறவு மலர்ந்து அது உங்கள் அதிர்ஷ்டத்தை விரைவுபடுத்தும். குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இன்று வெற்றியுடன் கூடிய அழகான நாள். உங்களின் மென்மையான பேச்சு முக்கிய பங்கு வகிக்கும். எனவே பேச்சில் கவனம் தேவை. பெற்றோரின் ஆசிகளைப் பெற்று அவர்களுக்கு உங்கள் சேவைகளை வழங்க மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
தானம்: கோவிலில் எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடின உழைப்பு தேவைப்படும் இடங்களில் அதிர்ஷ்டம் இன்று முக்கிய பங்கு வகிக்கும். பணம் வரவு இன்று உண்டு. ஆனால் சில விஷயங்களை மேற்கொள்ளும் போது அவசரப்படாமல் இருங்கள். உங்கள் நல்லெண்ணத்தின் உதவியுடன், இன்றைய நாள் முடிவில் வெகுமதியைப் பெறுவீர்கள். உயர் மட்ட அறிவைப் பெறுவதற்கு நீங்கள் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும்போது மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். இன்று மாலைக்குள் பண பலன்களை பெற அதிக வாய்ப்புகள் உண்டு. நேரமில்லாதது போல் தோன்றும், எனவே விழாக்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: பிச்சைக்காரருக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்கள் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் சரி, இன்றைக்கு பல பாராட்டுக்கள் உங்களை தேடி வரும். இந்த நாள் கைதட்டல்களாலும் வளர்ச்சியாலும் நிறைந்திருக்கும். மேலும் இன்று திடீர் வளர்ச்சி அல்லது வெற்றியை எதிர்பார்க்கலாம்.அரசு உத்தரவுகளை அணுகுவதற்கு இன்று சிறந்த நாள். விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் இன்று கிடைக்கும் வாய்ப்புகளை கைப்பற்றி முன்னேற வேண்டும். சமையல் கலைஞர்கள், பெண் நடிகர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
தானம்: வீட்டு வேலை செய்பவர்களுக்கு அல்லது பிச்சைக்காரர்களுக்கு ஒரு மாதுளை தானம் செய்யுங்கள்

ஜூன் 21 அன்று பிறந்த பிரபலங்கள்: ஷிவ் பண்டிட், அபிநந்தன் வர்த்மான், ரீமா லகூ, கௌதமி கபூர், முக்தி மோகன்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி