Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 ஆகஸ்ட் 2022) ஆசிரமத்தில் பால் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 ஆகஸ்ட் 2022) ஆசிரமத்தில் பால் தானம் செய்யவும்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 22-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பெர்சனாலிட்டியின் பலத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான நேரம் இது. சொத்துகளை விற்பனை செய்வதன் மூலமாக பணம் திரட்டலாம். விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அரசியல் தலைவர்களுக்கு வெற்றி தரக் கூடிய தலைமைத்துவம் கிடைக்க இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1

தானம் - ஆசிரமங்களில் கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சக ஊழியர்களுடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆகவே, உணர்ச்சிவசப்படாமல், கொஞ்சம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறானவையாக இருந்தாலும் லாபம் பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை கண்டறியவும். உங்களை அவமதிக்கும் ஒருவரை சந்திக்க வாய்ப்பு உண்டு, ஆகவே கவனமாக இருக்கவும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் முதல் வேலையாக குரு மந்திரம் உச்சரிக்கவும். உங்கள் ஆறாம் அறிவு மற்றும் சிந்தனை திறன் ஆகியவை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களை ஈர்க்கும். பணியிடங்களில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்கள் பேச்சின் மூலமாக பிறரது கவனத்தை ஈர்க்கலாம். காதலில் இருப்பவர்கள் திறந்த மனதுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பெண் பணியாளருக்கு செந்தூரம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் பணம் ஈட்டக் கூடிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்கள் ஆற்றல் மிக உயர்வாக இருக்கும். ஆகவே, ஒற்றை திசையை நோக்கி கவனம் செலுத்துவது பலனை தரும். சொத்து வாங்கும் முடிவை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும். மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் மாதாந்திர இலக்கை எட்டுவீர்கள். சைவு உணவு மற்றும் தியானம் ஆகியவற்றை கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கோபத்தை கட்டுப்படுத்தவும். இலக்கை நோக்கி எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறீர்கள், எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் உணர்வுகள் வெளிப்படுத்தும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டு ஆகியவை கிடைக்க இருக்கிறது. டிசைனர்கள், இடைத்தரகர்கள், வங்கிப் பணியாளர்கள், தடகள வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆசிரமத்தில் பால் தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உங்களை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். ஆகவே, சாதூர்யமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். பிறரிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ள வேண்டாம். புதிய வேலை அல்லது புதிய வீடு தேடுபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு அமைய இருக்கிறது. நடிகர்கள் மற்றும் ஊடக துறையினருக்கு வெற்றி காத்திருக்கிறது. வாழ்வில் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இளம் அரசியல் தலைவர்கள், நிர்வாக அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பாதுகாப்புத் துறையினர், விவசாயிகள், ஆடிட்டர்கள் போன்றோருக்கு துறை சார்ந்த வளர்ச்சி காத்திருக்கிறது. கேதுவின் பலன்கள் சாதகமாக இருப்பதால் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய உறவுகள் மலரும். எதிர் பாலினத்தவர் மூலமாக அதிர்ஷ்டம் கை கூடும். பெண்களுக்கு பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்ய வேண்டும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் உள்ள அனைத்து சீனியர்களையும் உங்களது மேலாண்மை திறன் மூலமாக ஈர்ப்பீர்கள். கடந்த கால கர்ம வினைப் பயன்கள் விளைவாக நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன. சமூக தொடர்புகள் மூலமாக வெற்றி கிடைக்க இருக்கிறது. அதிக அறிவுத்திறனை எட்டுவதற்கு நேரத்தை செலவழிப்பீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பிரபலம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சுப் பழம் தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய நண்பர் ஒருவரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். காதலில் இருக்கும் நபர்கள், தூதுவர்கள் மற்றும் பிற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மருத்துவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைக்க இருக்கிறது. நேர்காணல்களில் கலந்து கொள்ள சிறப்பான நாளாகும். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நடிகர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - நண்பருக்கு துளசி செடி வழங்கவும்.

ஆகஸ்ட் 22 அன்று பிறந்த பிரபலங்கள் : சிரஞ்சீவி, டி.எஸ்.பாலையா, டோனா கங்குலி, ராஹா ராம்பால் சிங், தேவ்லோனா பாட்டர்ஜி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி