Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 ஜூலை 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 ஜூலை 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஜூலை 29-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையை பெற இன்று நல்ல நாள். நீங்கள் இன்று எதையும் மறைமுகமாக அணுகாமல் நேரடியாக அணுக வேண்டும். சூரிய ஆற்றல், மின்னணுவியல், கல்வி மற்றும் புத்தகங்கள் வணிகம் செய்வோர் இன்று அதிக வருமானம் பெறலாம். பெரிய குழுவுடனான உங்கள் தொடர்பு இன்று வெற்றிகரமாகத் தெரிகிறது. புதிய வழிகாட்டுதல்கள் அல்லது வழிகாட்டியை இன்று சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் - கிரீம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - இன்று கோவிலில் கடுகு எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

திருமணம் போன்ற நிரந்தர உறவு ஏற்படுத்தி கொள்ள இன்று ஒரு சிறந்த நாள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ராஜதந்திரம் மற்றும் நேரடி தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கும். அன்பானவர்களுடன் நேரம் செலவிட இன்று சிறந்த நாள். நேர்காணல், தேர்வுகள், போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பவர்கள் ஸ்கை ப்ளூ நிறம் அணிவது நல்லது. நண்பர்கள் மற்றும் முதலாளிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு உணவு கொடுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பயிற்சியாளர் மீது நம்பிக்கை வைத்தால் சிறந்த முடிவுகளை பெறுவீர்கள். இன்று உண்மையை மட்டுமே பேசுங்கள். நண்பர்களுடன் நாளை செலவழிக்க சிறந்த நாள். உயர் படிப்பு, நடனம், சமையல், வடிவமைப்பு, நடிப்பு, கற்பித்தல் அல்லது தணிக்கையில் இருந்தால் திறமையை வெளிப்படுத்தும் நேரம். விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்டோர் அதிக பண பலன்களை பெற நிதானமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழப்பங்கள் நீங்கி இன்று நிம்மதி அடைவீர்கள். இந்த நாள் எதிர்கால திட்டமிடல் மற்றும் செயல்பாட்டால் நிறைந்துள்ளது. இன்று பெரும்பாலான நேரத்தை ஆலோசனையில் செலவிடுவீர்கள். தனிப்பட்ட உறவுகளும் குழப்பமின்றி ஆரோக்கியமாக இருக்கும். உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்டம் மற்றும் ஸ்திரத்தன்மை காலத்தை இன்று அனுபவிப்பீர்கள். உணர்ச்சிகள் உங்கள் முடிவுகளை முந்த விடாதீர்கள். பயணப் பிரியர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது தொடர்பாக இன்று ஆராயலாம். உணவு மற்றும் பானங்களில் ஒழுக்கம் இன்று அவசியம். இன்று உங்களது பழைய நண்பர் அல்லது பழைய வழிகாட்டி ஒருவரை நீங்கள் சந்திக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆதரவற்றோருக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டம், ஆடம்பரம், மகிழ்ச்சி உள்ளிட்டவை நிறைந்த நாள். குடும்பத்தினர், நண்பர்கள்மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை கண்டு இன்று நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவீர்கள். அழகுசாதனப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க இன்று சிறந்த நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகள் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஃபினான்ஷியல் அக்கவுன்ட் மற்றும் நில விவகாரங்களில் பெரியவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம். நீங்கள் இன்று அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இன்று பங்குதாரர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்த சமரசமும் தேவையில்லை, எனவே உங்கள் முடிவுகளில் நம்பிக்கையுடன் இருங்கள். வழக்கறிஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று மிக உயர்ந்த வெற்றியை பெறுவார்கள். இன்றைய நாளை வெற்றிகரமாக முடிக்க சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களின் தாராள மனப்பான்மையும், உயர் நிலை அறிவை பார்த்து மக்கள் உங்கள் ரசிகராக மாறுவார்கள். இன்று தகவல் தொடர்பு முக்கியமானது. டாக்டர்கள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், உலோக உற்பத்தியாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் இன்று ரிஸ்க் எடுக்கலாம். பண பரிவர்த்தனைகளுடன் நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள் மற்றும் இன்றைய நாள் அதிக பண பலன்களுடன் முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒரு டீமாக பணிபுரியும் போது உங்கள் ஈகோ அல்லது ஆக்ரோஷத்தை ஒதுக்கி வைக்க நினைவில் கொள்ளுங்கள். புதிய வேலையைத் தேர்ந்தெடுப்பவர்கள், புதிய உறவுகளில் ஈடுபடுபவர்கள், நிலம் வாங்குபவர்கள் மற்றும் மேற்படிப்புகளுக்குச் செல்பவர்களுக்கு இன்று ஒரு அழகான நாள். அரசியல், ஊடகம், நடிப்பு, விளையாட்டு, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமையடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

ஜூலை 29 அன்று பிறந்த பிரபலங்கள்: அனுப் ஜலோட்டா, சஞ்சய் தத், எல்லே அவ்ராம், மயூர் மேத்தா, மன்மீத் சிங்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி