Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 ஆகஸ்ட் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 ஆகஸ்ட் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 29-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காலையில் சூரிய பகவானுக்கு தண்ணீர் படையல் வைக்கவும். பெரிய குழுவினருடன் நீங்கள் வைத்துள்ள பார்ட்னர்ஷிப் இன்று வெற்றி அடையும். ஷாப்பிங் செய்ய, குறுகிய பயணம் செல்ல அல்லது நேர்காணல் செல்வதற்கு மிகவும் சிறப்பான நாளாகும். மதிய உணவில் மஞ்சள் நிற இனிப்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்ல பந்தங்களை இன்று விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம் மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - கோவிலில் கடுகு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சிவன் மற்றும் பார்வதிக்கு பூஜைகளை செய்து அவர்களது போதனைகளை கற்றுக் கொள்ளுங்கள். திருமணம் உள்பட நிரந்தரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான நாளாகும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நேரடி பேச்சுவார்த்தை என்பது இன்று முக்கியத்துவம் பெறும். நீங்கள் யோசித்து வைத்திருந்த எதிர்கால திட்டங்கள் இன்று நனவாகும். ஆகவே, வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள். நண்பர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் வெற்றி உறுதியாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு தானம் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பயிற்சியாளர் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்றினால் மிகச் சிறப்பான முடிவுகளை எட்ட முடியும். தேவையற்ற பிரச்சினைகளை மறந்துவிட்டு உண்மையை பேசினால் இன்றைய நாள் சிறப்பாக அமையும். உயர் கல்வி படிப்பவர்கள், நடனம், சமையல், டிசைன், நடிப்பு, கற்பித்தல் போன்ற பணிகளை செய்பவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சரியான சமயம் ஆகும். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் போன்றோருக்கு பண பலன்கள் கிடைக்க இருக்கின்றன.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் குங்குமம் வழங்க வேண்டும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சொத்து விற்பனை மூலமாக உங்கள் கடன்களை குறைத்துக் கொள்ளுங்கள். மிகப் பெரிய குழப்பங்களுக்கு தீர்வு வர இருப்பதால் இன்று தெளிவு கிடைக்கும். பெரும்பாலான நேரத்தை கவுன்சிலிங் மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செலவிடுவீர்கள். இன்று காவிநிற இனிப்புகளை சாப்பிடுவது கட்டாயமாகும். சுற்றியுள்ள நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற தானியங்களை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று விநாயகரை பூஜை செய்து அவரது ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள மறக்காதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு உங்கள் சொந்த முடிவுகளை கெடுத்துக் கொள்ள வேண்டாம். முதலீட்டு திட்டங்களில் லாபம் கிடைக்கும். சொத்து தொடர்பான முடிவுகளில் சுமூகமான தீர்வு கிடைக்கும். பயணம் மீது காதல் கொண்டவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். இன்று பழைய நண்பரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆசிரமங்களில் பச்சை நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் பார்ட்னருடன் நேரம் செலவிடுவதுடன் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வணிகம் தொடர்பான விஷயங்களில் வெற்றியை உறுதி செய்யும் சதூர்யமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். அழகு சாதன பொருட்கள், சொகுசு பொருட்கள், வாகனங்கள், வீடு, நகை போன்றவற்றை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும். மாலையில் காதல் சந்திப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - வீட்டு பணியாளருக்கு துடைப்பம் தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் நீங்கள் ஒரு ஹீரோவை போல செயலாற்றி அனைத்து பொறுப்புகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிதி மற்றும் நிலம் சார்ந்த விஷயங்களில் மூத்தவர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்கவும். இன்றைய தினம் வணிகத்தில் பார்ட்னர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்தவித சமரசங்களையும் செய்து கொள்ள வேண்டாம். திருமண ஏற்பாடுகள் குறித்து பரிசீலனை செய்யலாம். வழக்கறிஞர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் நிற சாதம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று தடை ஏற்படும் இடங்களில் உங்களுடைய நல்லெண்ணம் மற்றும் பெரிய அளவிலான சமூக தொடர்பு ஆகியவற்றை பயன்படுத்தவும். உங்களின் ஜனரஞ்சகமான நடவடிக்கை மற்றும் மிகப்பெரிய அறிவாற்றல் ஆகியவை சுற்றியுள்ள மக்களை உங்களை நோக்கி ஈர்க்கும். வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக இருப்பதால் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இன்றைய தினம் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொள்வீர்கள். இறுதியாக பணப்பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவை உள்ள நபர்களுக்கு காலணி தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஒரு குழுவினருடன் இணைந்து பணியாற்றுகையில் உங்களது பொறாமை மற்றும் வேகம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு செயலாற்றவும். புதிய இடத்திற்கு மாறி செல்ல விரும்புபவர்கள் அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். நிலம் வாங்குவது மற்றும் உயர்கல்வி படிப்பது போன்ற வாய்ப்புகள் உண்டாகும். காதலில் இருக்கும் நபர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அரசியல், மீடியா, நடிப்பு, விளையாட்டு, நிதி அல்லது கல்வித்துறை சார்ந்து உள்ளவர்கள் பெரிய வளர்ச்சியை எட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.

ஆகஸ்ட் 29 அன்று பிறந்த பிரபலங்கள் : மேஜர் தயான்சந்த், அகினேனி நாகார்ஜுனா, லீனா சந்திரவார்கர், ஜிவ்ராஜ் நாராயணன் மேத்தா, ராமகிருஷ்ண ஹெக்டே,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி