Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஆகஸ்ட் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஆகஸ்ட் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 13-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சொத்துக்கள் அல்லது கேபிடல் தொழில்களில் முதலீடு செய்யும்போது நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அது நிச்சயம் பலன் தரும். விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளை செய்வது தாமதம் ஆகும். இயந்திரம் வாங்குவது, மெட்டல், செங்கல், பிளாஸ்டிக், பர்னிச்சர், புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள், நிதி போன்ற தொழில்களை ஆர்வத்துடன் செய்தால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகத்தில் பார்ட்னர்ஷிப் சேரும் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். பிரச்சினைகள் பெரியதாகப் உருவெடுத்தாலும் அதற்கு உங்களால் தீர்வு காண முடியும். உங்கள் சுய மரியாதைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கூட்டத்தை தவிர்க்கவும். குழந்தைகள் மூத்த உறுப்பினர்களுடன் ஒத்துழைப்பாக நடந்து கொள்ள வேண்டும். காலையில் குளிக்கும்போது தண்ணீரில் சிறிது பால் கலந்து பால் குளியல் குளிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் இரண்டு தேங்காய்கள் தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அன்புக்குரியவர்கள் உடனான பழைய குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கான நாள் ஆகும். உங்களுக்கான பணி நியமனம் உங்களை தேடி வர இருக்கிறது. இசையை விரும்புவர்கள், கைவினை கலைஞர்கள் போன்றோருக்கு வளர்ச்சி ஏற்பட இருக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போன்றோருக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உங்கள் உணவில் மஞ்சள் நிற உணவுப் பொருளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - குழந்தைகளுக்கு வாழைப்பழம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இதுதான் விஷயம் என்று ஒரே முடிவில் இருப்பது மற்றும் ஒரு வேலையை செய்ய நீண்ட போராட்டங்களை மேற்கொள்வது ஆகியவை தான் உங்கள் பலவீனங்கள். ஆகவே, உடனடியாக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். பயணங்கள் வெற்றிகரமாக அமையும் என்றாலும், நீங்கள் வாகனம் இயக்குவதை தவிர்க்கவும். மார்க்கெட்டிங் துறையில் உள்ள நபர்கள் கடினமாக உழைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பிச்சைக்காரருக்கு உணவு தானம் அவசியம்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திறமைக்கு பணப் பரிசு கிடைக்கும். ஆகவே, சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளுங்கள். நடிகர்கள், ஊடகவியலாளர்கள், ஜாக்கீஸ், டிசைனர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் போன்றோருக்கு வெற்றி காத்திருக்கிறது. விற்பனை மற்றும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு வேகமான வளர்ச்சி காத்திருக்கிறது. மாணவர்களுக்கு கல்வி ரீதியிலான மற்றும் கலாச்சார ரீதியிலான வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு பாசிப்பயறு தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிக வாய்ப்புகள் மிக உயர்வாக இருக்கும் சூழலில், சமூக கட்டமைப்பை நீங்கள் பலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. பசுமை சூழல்களில் நேரம் செலவிடுங்கள். புதிய வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறீர்கள் என்றால், அதற்கான சாதகமான சூழல் தென்படும். செலவுகளை சற்று கவனமாக மேற்கொள்லுங்கள். நிதி திட்டங்கள் நீண்ட காலங்களுக்கானதாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு சில்வர் பாத்திரங்கள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதையும் மிக ஆழமாக யோசனை செய்ய வேண்டாம். எதையேனும் வைத்து மனதை குழப்பிக் கொண்டிருந்தால் நேர விரயம் ஏற்படும். பெரிய விஷயமானாலும், சிறிய விஷயமானாலும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல் விரைவாக முடிவெடுக்கவும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்க மூத்தவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். அரசியல் தலைவர்கள் மிக நன்றாக மேடை பேச்சு பேசலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழப்பம் மற்றும் திட்டமிடுவதில் தாமதம் ஆகியவை உங்கள் செயல்பாடுகளை தாமதமாக்கும். உங்கள் ஆற்றல் உங்களுக்கான வெற்றியை இன்று தேடி தரும். தூங்கி எழுந்ததும் போர்வையை மடித்து வைக்க தவறாதீர்கள். மருத்துவர்களின் முயற்சிகளுக்கு பணப்பரிசு கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பணப் பலன்கள் கிடைக்கும். சைவ உணவுகளை உட்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்கள் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் குணாதியசத்தை மாற்றிக் கொண்டு தான காரியங்களை மேற்கொள்ள வேண்டும். திருமண வரன்கள் பார்ப்பதற்கு மிக அழகான நாள் இதுவாகும். கடல்கடந்து வணிக ஒப்பந்தங்கள் வரும். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ள சாதகமான நாள் ஆகும். நடிகர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - வீட்டுப் பணியாளர்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் வழங்க வேண்டும்.

ஆகஸ்ட் 13 அன்று பிறந்த பிரபலங்கள் : அனிதா ராஜ், ஸ்ரீதேவி, ரமேஷ் சந்திர தத், வைஜெயந்திமாலா பாலி, ரேணுகா சௌஹாரி, அபாரா மேத்தா
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி