Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11 ஆகஸ்ட் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11 ஆகஸ்ட் 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 11-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய பொழுது சற்று மந்தமாக தொடங்கினாலும் சிறிது நேரம் கழித்து வேகம் எடுக்கத் தொடங்கும். வழக்கு விசாரணைகள், ஒப்பந்தங்கள் செய்வது, வழிகாட்டியிடம் அறிவுரை பெறுவது, உத்திகளை வகுப்பது, புதிய உறவுகளை ஏற்படுத்துவது என அனைத்துமே இன்று சிக்கல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் கைகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று அலுவலகத்தில் உள்ள மூத்தவர்களுடன் கை கோர்த்து பணியாற்றவும்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1

தானம் - ஆசிரமங்களில் ஆடைகளை தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர் பாலினத்தவருடன் வாக்குவாதம் ஏற்படும்போது சற்று ஜாக்கிரதையாக இருங்கள். தற்சமயம் வாழ்க்கை உங்கள் திட்டங்களுக்கு எதிரான பாதையில் நடக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் ஷாப்பிங் செல்லவும். ஒப்பந்தங்கள் செய்வதற்கு மிக சிறப்பான நாளாகும். பணியிடங்களில் உங்களின் எதிரிகளுடன் மிகவும் நுட்பமான தகவல் தொடர்பு அவசியம். அன்புக்குரியவர்களுடன் உணர்ச்சிகரமான பொழுதுகளை கழிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பால் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று திருமணம் தொடர்புடைய முடிவுகள் மற்றும் வணிகத்தில் பார்ட்னர்ஷிப் தொடர்புடைய முடிவுகள் உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில் அமையும். அதே சமயம், உங்கள் உடமைகள் மீது கவனமாக இருக்கவும். பழைய கவலைகளை மறந்துவிட்டு, உங்கள் மனதில் இருந்து பேசுங்கள். சமூக ரீதியாக கலந்து புதிய நண்பர்களை சேர்க்கலாம். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 7

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தம்பதியர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுநிலை இன்று வலுவாக இருக்கும். இன்றைக்கு பரிசு மற்றும் அங்கீகாரத்துடன் பணம் பெறும் நாளாகும். வணிகத்தில் அதிரடியான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மார்க்கெட்டிங் மீது அதிக கவனம் செலுத்த நேரிடும். பயணம் செய்வது அல்லது இயந்திரங்களை கையாளுகையில் கவனமுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்திற்கு சிட்ரஸ் பழங்களை சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - நண்பருக்கு துளசிச் செடியை அன்பளிப்பாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் அல்லது சுதந்திரத்தை அளவுக்கு அதிகமாக செலவழிக்க வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பிறரை காயப்படுத்தக் கூடும் என்பதால் அதை இன்று தவிர்க்க பாருங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அபாயம் நிறைந்தவை என்பதால் அதிரடியாக செயல்படுவதை தவிர்க்கவும். சொத்து ரீதியான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளலாம். உணவு மற்றும் பானங்களில் ஒழுங்கு கடைப்பிடிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆசிரமங்களில் பச்சை நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் கருத்துக்களை தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் கூட்டத்தினரை தவிர்க்கவும். உங்கள் ஆற்றல் எல்லையில்லாத ஒன்று. அதை ஒற்றை திசை நோக்கி பயன்படுத்துங்கள். குழந்தைகள் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனம், வீடு, இயந்திரம் அல்லது நகை போன்றவற்றை வாங்குவதற்கு சிறப்பான நாள் ஆகும். மாலையில் நடைபெறும் காதல் சந்திப்புகள் மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் பீச்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் இனிப்பு வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் சார்ந்த விஷயங்களில் உங்களின் பழமையான தொடர்புகள் மற்றும் புத்திகூர்மை ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான நாள் இதுவாகும். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் தோராயமான முடிவுகள் மூலமாக வணிகத்தில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை குறைக்கலாம். பார்ட்னர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது. திருமண பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகள் கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு பயணம் மற்றும் வழக்கு விசாரணைகளை தவிர்க்கவும். அரசுத் துறைகளில் உள்ள தொடர்புகளை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எளிமையை பார்த்து உங்கள் வாழ்க்கைத் துணை அசந்து போவார். மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சற்று பிஸியாக இருப்பீர்கள். ஆகவே நாளின் முடிவில் நல்ல திருப்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணிகளை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சட்டைப் பையில் சிவப்பு நிறப் பேனா வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு நடந்தால் புகழ்ச்சி பெறுவதில் எந்தவித தடையும் இருக்காது. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பரஸ்பர நம்பிக்கை முக்கியமானது. காதலில் இருப்பவர்கள் அதை தன் துணையிடம் வெளிப்படுத்தலாம். அரசியல், டிசைனிங், மீடியா, அல்லது கல்வித் துறை போன்றவற்றில் இருக்கும் நபர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பெண் தோழிக்கு அழகு சாதன பொருட்கள் வழங்கவும்.

ஆகஸ்ட் 11 அன்று பிறந்த பிரபலங்கள் : பர்வேஸ் முஷரஃப், சுனில் ஷெட்டி, ஸ்ரீ பிரகாஷ் லோஹியா, ஜான் ஆப்ரஹாம், யாஷ்பால் சர்மா,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி