Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 செப்டம்பர் 2022) கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 செப்டம்பர் 2022) கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். இன்றைக்கு உங்களிடம் முழுமையான சாதூர்யம் வெளிப்படும். நீங்கள் வெற்றி அடைவதைப் பார்த்து பலர் பொறாமை அடைகின்றனர். ஆகவே, மாலையில் பால் கலந்த நீரில் குளிக்கவும். இன்றைக்கு சிறப்புவாய்ந்த தலைவர் ஒருவரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - கால்நடைகளுக்கு வாழைப்பழம் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்கள் மனவோட்டம் சோர்வாக இருக்கும். காதலில் இருப்பவர்கள் அதனை பாந்தமாக மாற்றுவதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே குழப்பங்களை எதிர்கொள்வீர்கள். முதலீடுகளில் லாபம் குறைவாக வரும் என தெரிகிறது. ஆகவே, பெரிய முதலீடுகளை செய வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு இன்று தண்ணீர் வைக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கைவினை பொருள் கலைஞர்கள், டிசைனர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோருக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இன்றைக்கு உங்கள் அன்புக்குரியவரின் மனதை கவரலாம். நீங்கள் அரசியல் கட்சி நிர்வாகி அல்லது அரசு அதிகாரி என்றால் பெரும் திரளான மக்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மாணவர்கள் தேர்வெழுதும் முன்பாக குரு மந்திரம் உச்சரிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - 3 மற்றும் 1

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சாஃப்ட்வேர் அல்லது ஹார்டுவேர் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இன்று ஏற்றம் நிறைந்த நாளாகும். இன்றைக்கு நீங்கள் நிறைய திட்டமிடல்களை மேற்கொள்வீர்கள். சூரிய மின் உற்பத்தி, படம் இயக்குதல், சமையல் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் இயந்திரங்களை கையாளும் போது கவனமுடன் இருக்கவும். சைவ உணவுகளை சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - கிரே மற்றும் க்ரீம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - நண்பருக்கு மணி பிளாண்ட் பரிசளிக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தலைவர்கள் தங்களுக்கான விசுவாசிகளை அதிகரித்துக் கொள்ளலாம். வாழ்க்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றால் உறவுகளில் நேர்மை மற்றும் நம்பிக்கையை கடைப்பிடிக்கவும். குழுவில் இணைந்து பணியாற்றும் நபர்கள் இன்று ஹீரோ போல உணருவீர்கள். உங்கள் சுதந்திரத்தை தவறாக உபயோகிக்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் கோபம் கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு பால் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். அவை நீண்ட கால பலன்களை தராது. இன்றைக்கு நீங்கள் மிகவும் சோர்வாக உணருவீர்கள். சிறந்த வாழ்க்கை துணை கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். குழந்தைகள் விஷ்ணுவிற்கும், லெட்சுமிக்கும் இன்று சிறப்பான பூஜைகள் செய்வதைக் கண்டு பெற்றோர் பெருமை அடையலாம்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளிக்காசு தானமாக கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆவண நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தால் அதை கட்டாயம் செய்து கொள்ளவும். மூத்தவர்களின் ஆலோசனைகளை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளவும். திருமண ஏற்பாடுகள் குறித்து பரிசீலனை செய்யலாம். சிவனை வழிபட்டால் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் எள்ளு தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வணிகத்தின் போக்கை மாற்றியமைக்க பண பலத்தை உபயோகிக்கவும். சட்ட ரீதியான வழக்குகளுக்கு செல்வாக்கு மிகுந்த நபர்கள் அல்லது பணத்தின் மூலமாக தீர்வு கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு நிறைவேற இருக்கிறது. பயண ஏற்பாடுகளை கட்டாயம் தள்ளி வைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழந்தைகள் தங்கள் எதிர்காலத்திற்கு திட்டமிட சிறப்பான நாளாகும். அரசு ஒப்ப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். மியூஸிக், மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ் கிடைக்கும். அரசியலில் நுழைய இருப்பவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொது மேடையில் பேச, நேர்காணல் செல்ல சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.

செப்டம்பர் 1 அன்று பிறந்த பிரபலங்கள் : பத்ம லெட்சுமி, மனோஜ் பாவா, ராம் கபூர், ஏ.சி.பிரபுபடா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி